Author: Editor web1

பராபல ஆண்டு 2026 ஜூன் 2, வைகாசி 19ம் தேதி குருப் பெயர்ச்சி நிகழ்கிறது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். கடகம் குருவிற்கு உச்ச வீடு என்பதால், இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சுப பலன்களை வாரி வழங்கும். மேஷம்: குரு 4-ம் இடத்திற்கு வருவதால் சொத்துச் சேர்க்கை உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ரிஷபம்: குரு 3ம் இடத்திற்கு வருவதால் தைரியம் கூடும். இளைய உடன்பிறப்புகள் மூலம் உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டு. மிதுனம்: குரு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வருவதால் நிதி நிலைமை சீராகும். பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடகம்: ஜென்ம குருவாக இருந்தாலும், குரு உச்சம் பெறுவதால் ஆளுமைத் திறன் கூடும். கௌரவம், அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். சிம்மம்:…

Read More

2026 மே மாதத்தில் முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன்மற்றும்சூரியன்தங்களின்நிலைகளைமாற்றுகின்றனர். மே 11ம் தேதி செவ்வாய்தனதுசொந்தவீடானமேஷராசிக்குச்செல்வதுபலராசிகளுக்குத்துணிச்சலையும்புதியமாற்றங்களையும்தரும். 12 ராசிகளுக்கான மே மாத சுருக்கமான பலன்கள் இதோ: மேஷம் மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், உங்களிடம் மிகுந்த ஆற்றலும் தன்னம்பிக்கையும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவினாலும், அவசரப்பட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ரிஷபம் நிர்வாகத் திறமை கூடும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண காரியங்கள் கைகூடும். தேவையற்ற பயணங்களால் செலவுகள் ஏற்படலாம். மிதுனம் கவர்ச்சியும் செல்வாக்கும் கூடும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வருமானத்தைப் பெருக்கப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் விஷயங்களில் பெற்றோரின் சம்மதம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடகம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி…

Read More

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருப்பூர் அருகே அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணியுடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் தங்களது பாவக்கணக்குகள் குறைக்கப்படும் என நம்பப்படுவதால் சித்திரகுப்தரை  தரிசிக்க பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டனர். இதனால் கோயில் முன்பாக இரண்டு கிலோ மீட்டர்  தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்திரகுப்தரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது.

Read More

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 2வது வாரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையுமா அல்லது புயலாக வலுப்பெறுமா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழையைக் கொடுக்கும். இதனிடையே சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read More

திருவாரூர் அருகே உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள்  திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் 16வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத் திருவிழா ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற்று நிறைவடைகிறது. இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத் திருவிழாவில் திருக்கண்ணமங்கை கிராம மக்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து   தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிந்தா… கோவிந்தா… என முழக்கமிட்டு ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.

Read More

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து…

Read More

தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும் என்றும் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிவப்பு சீருடையில் வந்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பின்னர், நிகழ்வில் பேசிய அவர், உரிமைக்காகவும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். இந்தியாவில் முதன் முதலில் மே முதல் நாளை சென்னையில் தான் கொண்டாடத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமில்லாமல் அந்த விடுமுறை நாளை முதலமைச்சர் கலைஞர்…

Read More

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (மே 1) ரூ.933 அதிரடியாக உயர்த்தப்பட்டு ரூ.3,237-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலவாணி மதிப்பைக் கணக்கில் கொண்டு பாரத் பெட்ரோலியம்,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள்  சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றி அமைத்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக மே மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (மே 1) அதிரடியாக ரூ.933 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.…

Read More

இன்று மே 1. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் அஜித் குமார் அவர்களின் 55-வது பிறந்ததினம். தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த அஜித்தின் திரைப் பயணம் மற்றும் சாதனைகள் குறித்த சிறு தொகுப்பு. 1990-ல் ‘என் வீடு என் கணவர்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அஜித், 1993-ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித்துக்கு, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. பின்னர் ‘வாலி’ படத்தில் அவர் காட்டிய வில்லத்தனமான நடிப்பு அவருக்கு முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. ‘தீனா’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘விஸ்வாசம்’ எனத் தொடர் அதிரடி வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ‘தல’யாக உயர்ந்தார்.…

Read More

மே 1. உலகம் முழுவதும் சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் போற்றும் வகையில் இந்த நாள் அமைகிறது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோரிக்கையை முன்வைத்து 1886-ம் ஆண்டு மே 1-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. மே 4-ம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். தொழிலாளர்களின் இந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 1889-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், மே 1-ம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாக அறிவித்தனர். இந்தியாவில் முதன்முதலில் மே…

Read More