Author: Editor web1

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் இந்த தருணத்தை, வெறும் அரசியல் நடைமுறையின் ஒரு கட்டமாக மட்டும் பார்க்க முடியாது. ஒவ்வொரு தேர்தலும் ஆட்சியைத் தீர்மானிக்கும். ஆனால் சில தேர்தல்கள் அரசியலின் எதிர்கால திசையையே மாற்றிவிடும். இந்த ஆண்டின் தமிழக சட்டசபை தேர்தல் அத்தகைய ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும் என்பதுதான் பல அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தமிழக அரசியல் பெரும்பாலும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. ஆட்சி மாற்றம் நடந்தாலும் அரசியல் அமைப்பின் அடிப்படை சமன்பாடு மாறவில்லை. ஆனால் இப்போது அந்த சமன்பாட்டில் சில புதிய மாற்றங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள், அரசியல் போட்டியின் வடிவம், சமூக மற்றும் பொருளாதார விவாதங்கள் — இவை அனைத்தும் தேர்தல் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளன. அந்த வகையில், இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை குறைந்தது…

Read More

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப். 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று (ஏப்.  21) மாலை முதல் தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் தேர்தல் விதிகள் மேலும் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126ன் கீழ் பின்வரும் விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. பிரசாரத்திற்குத் தடை: ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது. மின்னணு ஊடகக்…

Read More

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று (ஏப். 19) மாலை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசு வெடித்துச் சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிபொருள் உராய்வின் போது விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தலைமறைவாகி…

Read More

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் (28) பொன்னேரி (தனி) திருபெரும்புதூர் (தனி) சோளிங்கர் உதகமண்டலம் ஈரோடு கிழக்கு அறந்தாங்கி கடலூர் மயிலாடுதுறை காரைக்குடி சிவகாசி திருவாடனை திருவைகுண்டம் நாங்குநேரி குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் வேளச்சேரி ஊத்தங்கரை (தனி) துறையூர் (தனி) கவுண்டம்பாளையம் ஆத்தூர் (தனி) பென்னாகரம் சிங்காநல்லூர் அம்பாசமுத்திரம் கிருஷ்ணகிரி உசிலம்பட்டி சங்கரன்கோவில் மேலூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (5) தளி திருத்துறைப்பூண்டி (தனி) திருவில்லிபுத்தூர் (தனி) திருப்பூர் வடக்கு பவானிசாகர் (தனி) மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (5) கீழ்வேளூர் (தனி) கந்தர்வக்கோட்டை (தனி) பத்மநாபபுரம் பழனி திருவொற்றியூர் விடுதலை சிறுத்தைகள் (8) காட்டுமன்னார்கோவில் (தனி) செய்யூர் (தனி) திருப்போரூர் அரக்கோணம் (தனி) திண்டிவனம் பெரியகுளம் (தனி) கள்ளக்குறிச்சி (தனி) பண்ரூட்டி மதிமுக (4) (உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1) மொடக்குறிச்சி -…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி – டி.ஜெ.கோவிந்தராஜன் திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன் பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி ஆவடி – சா.மு.நாசர் மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி அம்பத்தூர் – டாக்டர் அ.பு.பூர்ணிமா மாதவரம் – எஸ்.சுதர்சனம் சென்னை ஆர்.கே. நகர் – ஜே.ஜே.எபினேசர் பெரம்பூர் – ஆர்.டி.சேகர் கொளத்தூர் – மு.க.ஸ்டாலின் வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன் திரு.வி.க நகர் (தனி) – கே.எஸ்.ரவிச்சந்திரன் எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா ராயபுரம் – டாக்டர் சுபேர்கான் துறைமுகம் – சேகர் பாபு சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன் நாகநாதன் அண்ணா நகர் – நே.சிற்றரசு விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, திமுக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10, விடுதலைச்சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்டிபிஐ 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன்…

Read More

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து மக்கள் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் இருந்ததாகவும், மக்கள் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4வது பெரிய மாநிலமாக இருந்ததாகவும், தற்போது 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உள்பட…

Read More

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு என்று தெரிவித்த அவர், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆளுநரிடம் எடுத்துக் கூறியும் அதனை அவர் ஏற்க மறுப்பதாக கூறினார். தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்குமாறு ஆளுநரிடம் பேரவைத் தலைவர் அப்பாவு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டும், அதனை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில், மைக் அணைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது தவறானது என்றும் எந்த மைக்கையும் அணைக்க வேண்டிய அவசியம் இல்லை…

Read More

2026ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவையின் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ஆளுநர் காத்திருந்தார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாமல், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து தமிழக அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கூறியும், அதைப் பின்பற்றாதது வருத்தமளிப்பதாகக் கூறி, பேரவையைவிட்டு ஆளுநர் வெளியேறினார். தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று…

Read More

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ள புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலூ’ திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. இந்தநிலையில், இருவரும் அண்மையில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, புராணக் கதை ஒன்றை அல்லு அர்ஜூனுவிடம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாகவும், அது அல்லு அர்ஜூனுக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More