Author: Editor web1

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. டிட்வா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்புவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4 ஆயிரம் கோடி)  நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்தார். இதில் 350 மில்லியன் டாலர் சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும் என்றார். புயலால் பாதிக்கப்பட்ட சாலை, ரயில் மற்றும் சேதமடைந்த பாலங்களை சரி செய்யவும்…

Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நவம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், சரிபார்க்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இந்தநிலையில், SIR பணிகள் நிறைவடைந்து, டிசம்பர்  19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இருந்தால்  நீக்கப்பட்ட வாக்காளர்கள் படிவம் 6ஐ  பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும்…

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் லாலட்டன் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 12-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதவாக படக்குழு தெரிவித்துள்ளது.

Read More

கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் மக்கள் துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அண்மையில் கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வடக்கு கோவாவில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தெற்கு கோவாவில் பாஜக 10 மற்றும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் மாநில கட்சியினரும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகத்துக்கு கோவா மக்கள் துணையாக நிற்பதாகவும், வளர்ச்சி அரசியலுக்கு அவர்கள் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதர் சகோதரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் மோடி…

Read More

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலை வனப்பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலையை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதனால்  யானை வழித்தடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மருதமலையில் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் 13 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ள உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், அடிவாரத்தில் உள்ள 4.96 ஏக்கர்…

Read More

அரசுப் போக்குவரத்து கழகங்களில் தவிர்க்கப்பட்ட ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதி காப்பது ஏன்? என்று சீமான் தெரிவித்தள்ளார்.  இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்…

Read More

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என, திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சந்திரசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து, திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்த மேல் முறையீட்டில் இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் செய்த தண்டனை, 6 மாதங்களாகக் குறைத்து, டிஜிபி உத்தரவிட்டார். ஆய்வாளர் முறையாக தகவல்களை தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த…

Read More

வங்கதேச நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை ராணுவம் மற்றும் போலீசார் தடுத்துள்ளநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாதி, டிசம்பர் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில்  பயங்கர கலவரம் வெடித்தது. இந்தநிலையில், பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், தீ வைத்தனர். இதனிடையே இந்து இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொன்று, அவரின் உடலை சாலையில் போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நாடாளுமன்ற வளாகம் உள்பட முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இருப்பினும்,…

Read More

மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், தனக்கு மிகவும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளது பெரிய சவாலாக இருக்குப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப சிறிது அவகாசம் தேவைப்படுவதாகவும், மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவன் என்றும் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் எடுக்க திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 21 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 13.62ஆக உள்ளது. இந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம்…

Read More

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமான ககன்யான் திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விண்கலத்தின் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் வகையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ககன்யான் விண்வெளி திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் மனித விண்வெளிப் பயணத்திற்கு பாராசூட் அமைப்பைத்…

Read More