Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
    தமிழ்நாடு

    உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

    Editor web1By Editor web1December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    HC 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என, திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சந்திரசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து, திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்த மேல் முறையீட்டில் இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் செய்த தண்டனை, 6 மாதங்களாகக் குறைத்து, டிஜிபி உத்தரவிட்டார்.

    ஆய்வாளர் முறையாக தகவல்களை தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும், 2016ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் சந்திரசேகரன் பெயரை சேர்க்கும்படியும், கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என, சந்திரசேகரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயர்வு பட்டியலில் தனது பெயரை சேர்க்கக் கோரி, உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன், அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள்  பரிசீலிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, இதுவரை அமல்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி,  உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை என்று தெரிவித்தார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டார்.

    இடைப்பட்ட காலத்தில், உத்தரவை அமல்படுத்தினாலோ, மேல் முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றாலோ, இருவரும் நேரில் ஆஜராக அவசியமில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலி மருந்து தயாரிப்பு விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி ஆளுநர் பரிந்துரை
    Next Article அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் தவிர்ப்பட்டது ஏன்?: சீமான்
    Editor web1
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.