Close Menu
    What's Hot

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு!- ஐகோர்ட் உத்தரவு
    தமிழ்நாடு

    மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு!- ஐகோர்ட் உத்தரவு

    Editor web1By Editor web1December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Murugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    கோவை மருதமலை வனப்பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலையை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதனால்  யானை வழித்தடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில், மருதமலையில் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் 13 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ள உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், அடிவாரத்தில் உள்ள 4.96 ஏக்கர் பரப்பளவில், 23 சென்ட் நிலத்தில் மட்டுமே 184 அடி உயர முருகன் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4.73 ஏக்கர் நிலம் அப்படியே விடப்படும் என்றும் அந்த இடத்தில் 15,000 பக்தர்கள் வரை தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலை அமையவுள்ள பகுதியில் இருந்து 600 மீட்டர் தொலைவில், 7 ஏக்கர் பரப்பில் பேருந்து முனையம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த குத்தகைக்கு எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வார நாட்களில் 2,500 பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் பக்தர்களும் வருகை தருவார்கள் என்றும் சிலை அமைக்கப்பட்ட பின், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமையவிருக்கும் முருகன் சிலை 7 கி.மீ., தொலைவில் உள்ள யானை வழித்தடத்தை, எந்த வகையிலும் பாதிக்காது என்றும் பக்தர்களால், வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, கண்காணிப்புக் கோபுரத்தை அமைத்து, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய   மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சந்தான ராமன் மற்றும் அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்தக் குழு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு… அன்புமணி பாய்ச்சல்
    Next Article வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் மக்கள் துணை நிற்கின்றனர்!- பிரதமர் மோடி
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    June 10, 2026

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.