Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு… அன்புமணி பாய்ச்சல்
    அரசியல்

    அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு… அன்புமணி பாய்ச்சல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதாக அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

    பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவுக்கும்,  அரசு ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே  சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால்  ஏற்கனவே அறிவித்தவாறு  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இப்படி ஒரு நிலையை  திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், அரசு ஊழியர் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இந்த சிக்கலுக்கு எப்போதோ  தீர்வு கண்டிருக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை கடந்த அக்டோபர் மாதமே அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்தன. அப்போதே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து  அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை.

    அதன்பின்னர், நவம்பர் 18 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டன.  வரும் 27-ஆம்  நாள்  வேலைநிறுத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.  கடந்த மாதமும், நடப்பு மாதமும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களை ஒடுக்கி பணிய வைக்கலாம் என்று நினைத்த திமுக அரசு, அது முடியாத நிலையில் தான் இப்போது பேச்சு நடத்த அழைத்தது.

    சென்னையில் நடந்த பேச்சுகளில் எந்த வாக்குறுதியையும் அரசு அளிக்கவில்லை. பேச்சுகளின் விவரத்தை முதலமைச்சரிடம் தெரிவித்து, அரசின் முடிவை  பொங்கலுக்குள் தெரிவிப்பதாக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதை கைவிடச் செய்வதற்காகவே  பொங்கலுக்குள் முடிவை தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது.  திமுக அரசின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்ள விரும்பாத அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்  நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட  இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம்  அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை  ஏமாற்றும் வகையில் கடந்த 24.02.2025-ஆம் நாள்  4 அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு நடத்தியது. அப்போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறிய அரசு  ஊழியர்கள், அதன் 10 மாதங்களாக  அரசு ஊழியர்களை  திரும்பிக் கூட பார்க்கவில்லை.  அரசு ஊழியர்கள் மீண்டும், போராட்டம் அறிவித்ததால் தான்  அவர்களை ஏமாற்றும் வகையில் மீண்டும் பேச்சு நடத்தி ஏமாற்றியுள்ளது.

    அரசு வாங்கிய கடனுக்கு ஆண்டுக்கு ரூ.70,503 கோடி வட்டி கட்ட வேண்டியிருப்பதால் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று  இன்றைய பேச்சுகளின் போது அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அரசின் கடனும், வட்டியும் அதிகரித்ததற்கு காரணம் திமுக ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான். அதற்கான தண்டனையை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர, அரசு  ஊழியர்களுக்கு தண்டனை அளிக்கக் கூடாது.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. காலவரையற்ற  போராட்டத்தால் அரசின் சேவைகளும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்றாலும், வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதமாக அரசு ஊழியர்கள் அதை கையில் எடுத்திருப்பதால் அதற்கும் பா.ம.க. தார்மீக ஆதரவளிக்கிறது.  அரசு ஊழியர்களுக்கு திமுக செய்த தொடர் துரோகங்களுக்கான பரிசு வரும் தேர்தலில் கிடைக்கும் படுதோல்வி தான். புதிய அரசு அமைந்த பின் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதை  பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயர் தவிர்ப்பட்டது ஏன்?: சீமான்
    Next Article மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு!- ஐகோர்ட் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.