Author: Editor web1

பீகார் தேர்தல் முடிவுகள் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு காரணத்தையடுத்து, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தகாவுக்கு திரும்பியது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இந்தநிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால், மாநாட்டு திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விழாவில் பங்கேற்க வந்த பாஜ தொண்டர்களில் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து வருந்துவதாக குறிப்பிட்டார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர்…

Read More

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனை பாஜக அரசு நசுக்கி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005-ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி.பி ஜி ராம் ஜி (விக்சித் பாரத் – ரோஜ்கர் அவுர் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் குறித்து கருத்த தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பல ஆண்டுகளாகவும், கொரோனா காலத்திலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த திட்டத்தின் கட்டமைப்பை விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் தன்னிசையாக பாஜக அரசு மாற்றி…

Read More

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ‘மா வந்தே’ என்ற தலைப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை வீர் ரெட்டி தயாரிக்கிறார். கிராந்தி குமார் இயக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்தநிலையில், ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை ‘மா வந்தே’ திரைப்படத்தில் மிகவும் சிறப்பான வகையில் காட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம், இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த எஸ்ஐஆர் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார். எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால்,…

Read More

12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. துபாயில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தகுதி பெற்றன. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில், வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8…

Read More

சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த யோகலட்சுமி இணைந்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை கதைக் களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். அண்மையில் விஜய் சேதுபதியும் ‘அரசன்’ படத்தில் இணைந்தார். இந்தநிலையில், அண்மையில் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டியில் முதற்கட்ட படிப்பிடிப்பு துவங்கி உள்ளநிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்பு உடன் விஜய் சேதுபதி உள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த யோகலட்சுமியும் உள்ளதால், அவரும் ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

Read More

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாடினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி இன்று (டிச. 19) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் SIR மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, விபி ஜி ராம் ஜி மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா இன்று (டிச. 19) தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்பி.க்களும் விருந்தில் பங்கேற்றனர்.…

Read More

காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று (டிச. 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை நீதிபதிகள் பாராட்டினர். இருப்பினும், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும்,…

Read More

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (டிச. 19) தீர்ப்பு வழங்குகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.  இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.…

Read More

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்தநிலையில், தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை  தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிடுகிறது. 2026ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி,  SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நவம்பர் 4ம் தேதி துவங்கிய  வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிட உள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், SIR பணிகள் சரியாக நடைபெறவில்லை என கூறப்படும் நிலையில், இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் உரிய…

Read More