Author: Editor web1
டெல்லி மெட்ரோவில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய வழித்தடங்களை அமைக்க அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுமார் 16 கிலோ மீட்டர் துரத்திற்கு டெல்லி மெட்ரோவில் புதிய வழித்தடங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.12,015 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ வழித்தடத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமாகி வரும் சூழலில், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலைக்…
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசுப் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசையை நோக்கிச் சென்றது. அப்போது எதிரே அடுத்தடுத்து வந்த கார்கள் மீது அரசுப் பேருந்து பயங்கரமாக மோதிய விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததால்,…
ரஷ்யா உடனான போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழிந்துள்ள 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடும் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. இருதரப்பு தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், உக்ரைனுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்கு இருநாடுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீவிரப்படுத்தினார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நேரில் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இருப்பினும், போரை நிறுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இருதரப்பு தாக்குதல்களை நிறுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டியது. இதனால் அமைதி ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்தது. இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான திட்டங்களுக்கு…
இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் AST ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் LVM -3 ராக்கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5…
தகவல்தொடர்பு சேவைக்கான அமெரிக்காவின் புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்கெட் மூலம் இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் AST ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் LVM -3 ராக்கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 எம்.6-ஐ விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (டிச. 23) காலை தொடங்கியது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு…
இலங்கைக்கு எதிரான 2வது T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில், விசாகப்பட்டினத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமரி அதபத்து 31ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ளார். முதன்முதலாக இயக்குநராக அவர் அறிமுகமாக உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தில் நாயகனாக சந்தீப் நடித்துள்ளார். ஃபரீயா அப்துல்லா, ராஜூசுந்தரம், சம்பத்ராஜ், அன்புதாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகி உள்ள ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக உடனான கூட்டணிக்கு விஜய் வர வேண்டுமென்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனான சந்திப்புக்கு பிறகு சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், விஜய் தனியாக நிற்பதை விட பாஜக உடனான கூட்டணியில் இணைந்து அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி எளிதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சருடனான ஆலோசனையில் விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசியதாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக, பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இப்போது எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்ட தமிழிசை, முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் இனி அடிக்கடி தமிழ்நாடு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் கூட்டணியால் திமுக வெடவெடத்துப் போய் உள்ளதாகவும்…
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அரசியல் பேசக் கூடாது என மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளநிலையில், வரும் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுவாக விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அதில் அவரின் பேச்சில் அரசியல் கலந்து இருக்கும். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசினால், அது அரசியல் நிகழ்ச்சி போன்று…
குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். 71 வயதைக் கடந்தும் இன்றும் இளமைத் துடிப்புடன் செயல்படும் நடிகர் ஜாக்கி சானுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஆசதர்சன நாயகனாவார். ‘தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர்’, ‘போலீஸ் ஸ்டோரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஜாக்கி சானின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சுவிட்ஸர்லாந்தில் 78வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள மிலன்- கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ்-க்கான ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான இடத்தில் ஒலிம்பிக் ஜோதியை அவர் ஏந்திச் சென்றார். 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் உட்பட பலமுறை ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.