Close Menu
    What's Hot

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!
    இந்தியா

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    Editor web1By Editor web1December 24, 2025Updated:December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    LVM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

    இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்​கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6′ என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. விண்​வெளி​யில் இருந்து நேரடி​யாக செல்​போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்​கு​வது​தான் இந்த செயற்​கைக்​கோளின் பிர​தான நோக்​க​மாகும். இதன்மூலம் செல்​போன் டவர்​கள் இல்​லாத அடர்ந்த காடு​கள், மலைப்பகு​தி​களி​லும் 5ஜி வேகத்​தில் இணை​யம், வீடியோ அழைப்​பு​கள், குறுஞ்​செய்தி சேவை​களைப் பெற முடியும்.

    ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ இது​வரை விண்​ணில் செலுத்​தி​ய​திலேயே இது​தான் அதிக எடை​யுள்ள செயற்கைக்​கோள் என்​பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு
    Next Article குழப்பத்தில் முடிந்த அதிமுக-பாஜக மீட்டிங்! ஓ.பி.எஸ் வைத்த பெரிய டிவிஸ்ட்..!
    Editor web1
    • Website

    Related Posts

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    July 1, 2026

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    July 1, 2026

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.