Author: Editor web1

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகருக்குள் வந்தடைந்த கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை அளித்து தரிசனம் செய்தனர்.…

Read More

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா வீழிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக கோயில் பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசும் பணிகள் நடைபெற்றன. கடந்த நான்கு நாட்களாக யாகசாலை அமைத்து வேதாச்சாரியார்கள், மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தநிலையில், இன்று (30.04.2026) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் யாக சாலையை வலம் வந்து கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கலசங்களில்…

Read More

சித்ரா பவுர்ணமி என்பது ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். 2026-ம் ஆண்டு மே 1-ம் தேதி (சித்திரை 18) இத்திருநாள் அமைகிறது. சித்ரகுப்தர் வரலாறு சித்ரா பவுர்ணமியின் மிக முக்கியமான அம்சம் எமதர்ம ராஜாவின் கணக்காளரான சித்ரகுப்தரின் பிறந்தநாளாகக் கருதப்படுவதுதான். பிரம்ம தேவர் தனது மனதில் இருந்து (சித்திரத்தில் இருந்து உருவானவர் என்பது ஒரு நம்பிக்கை) சித்ரகுப்தரை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. மனிதர்களின் பாவ- புண்ணியங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்வது இவரது பணியாகும். சித்ரா பவுர்ணமி நாளில் மக்கள் சித்ரகுப்தரை வழிபட்டு, தாங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பார்கள். இனிவரும் காலங்களில் நற்செயல்களை மட்டுமே செய்வோம் என உறுதி ஏற்பார்கள். ஆன்மிகச் சிறப்புகள் தேவர்களின் தலைவனான இந்திரன், தான் செய்த பாவங்கள் நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை பவுர்ணமி நாளில் லிங்கத்தை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இன்றும் மதுரையில் இந்த…

Read More

வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “சென்னை ஐ.ஐ.டி-யில் சாதித் தீ”  எனும் நூலின் ஆங்கிலப் பதிப்பாக வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது. கல்வி நிறுவனங்களில் நிலவும் சமூகச் சூழல்கள் குறித்த விவாதங்கள் மேலெழுந்து வரும் நிலையில், வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதிய “THE BURNING FIRE OF CASTE IN CHENNAI IIT” எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நூல், “சென்னை ஐ.ஐ.டி-யில் பற்றி எரியும் சாதித் தீ” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பாகும். உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. மே 2ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மை அரங்கில் இந்த அறிவுசார் நிகழ்வு நடைபெற உள்ளது. சமூக மற்றும் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள் நூல் வெளியீட்டு…

Read More

ஆன்மீகம், வரலாறு, கட்டிடக்கலை ஆகிய மூன்றுக்கும் இலக்கணமாகத் திகழும் ஒரு தலம் உண்டென்றால் அது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் தான். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருத்தலமான இது, வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, தமிழர்களின் கலைத்திறனை உலகுக்கு பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். காவிரி சூழ்ந்த தீவு நகரம் திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே ஒரு தீவு போல அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம். இந்தக் கோயிலின் அமைப்பு உலகிலேயே மிகவும் தனித்துவமானது. சுமார் 156 ஏக்கர் பரப்பளவில், 7 பிரகாரங்கள் மற்றும் 21 பிரம்மாண்ட கோபுரங்களுடன் ஒரு நகருக்குள்ளேயே ஒரு கோயில் அமையாமல், ஒரு கோயிலுக்குள்ளேயே ஒரு நகரம் அமைந்திருப்பதே இதன் தனிச்சிறப்பு. இராமாயணம் முதல் இன்று வரை புராணங்களின்படி, ஸ்ரீரங்க விமானம் பாற்கடலில் இருந்து தோன்றிய திருஉருவம், மகா விஷ்ணுவால் பிரம்மாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர்…

Read More

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம், மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மட்டுமல்ல, உலகளாவிய எண்ணெய் சந்தையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடற்படை தடைகள் காரணமாக, ஈரான் தற்போது கடுமையான ’எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சேமிப்பு நெருக்கடியை’ எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால், ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவோ அல்லது சில எண்ணெய் கிணறுகளை மூடவோ வேண்டிய நிலைக்கு செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சினை ஈரான் மட்டும் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கலாக இல்லாமல், ’இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கும்’ புதிய சவால்களை உருவாக்கக்கூடியதாக மாறியுள்ளது. ஆராய்ச்சி நிறுவனம் Kpler வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஈரானுக்கு தற்போது 12 முதல் 22 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படாத எண்ணெய் சேமிப்பு திறன் மீதமுள்ளது. ஏற்றுமதி தடைகள் காரணமாக, ஈரானின் எண்ணெய் களங்களில் உற்பத்தியாகும் எண்ணெய் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல்…

Read More

தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பொதுவாக அதிக வாக்காளர் பங்கேற்பு காணப்படும். கடந்த பல தேர்தல்களிலும் மாநில அளவில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தைத் தாண்டுவது வழக்கம். ஆனால் இந்தச் சராசரியில் இருந்து நீண்ட காலமாக விலகி நின்ற ஒரு நகரம் இருக்கிறது — அது சென்னை. மாநிலத்தின் அரசியல் மையமாகவும் நிர்வாக தலைநகரமாகவும் இருக்கும் சென்னை, தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து பின்னடைந்த நகரமாகவே விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது.ஆனால் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் சென்னையின் 16 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி அளவில் சராசரியாக 80 சதவீதத்தை தாண்டி உள்ளதாக வெளியாகி உள்ள தகவலை பார்க்கும்போது, ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: சென்னை வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா? நீண்ட கால விமர்சனம் சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு என்பது புதிய விவாதமல்ல. கடந்த இருபது ஆண்டுகளாகவே இது தேர்தல் ஆய்வாளர்களின் முக்கியமான…

Read More

இந்தியாவில் தேர்தல் என்பது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; அது ஜனநாயகத்தின் உயிரோட்டம். ஒவ்வொரு தேர்தலும் மக்கள் ஆட்சியின் அடிப்படை நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாகும். ஆனால் இந்தியா போன்ற பரந்த சமூக-அரசியல் அமைப்பில், ஜனநாயகம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுவதில்லை. ஒரே தேர்தல் முறையின் கீழ் கூட அரசியல் சூழல், தேர்தல் கலாச்சாரம், பாதுகாப்பு சூழ்நிலை போன்றவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. தற்போது நடைபெறும் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தல்கள் இந்த வேறுபாட்டை தெளிவாகக் காட்டுகின்றன. இரண்டு மாநிலங்களும் இந்திய அரசியலில் முக்கியமானவை. இரண்டிலும் கடுமையான அரசியல் போட்டி நிலவுகிறது. ஆனால் தேர்தல் நடைபெறும் முறை மற்றும் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடு இந்திய ஜனநாயகத்தின் பல்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது. ஒரே நாள் தேர்தல் vs பல கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் பொதுவாக ஒரே கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு ஒரே நாளில்…

Read More

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: இந்த முறை வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும்? குறிப்பாக, பிற்பகல் 3 மணிக்கே வாக்குப் பதிவு  70 சதவீதத்தை   தொட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், இது 80 சதவீதத்தை தொடுமா என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் விவாதமாக உள்ளது. தேர்தலில் வாக்காளர் வருகை அதிகமாக இருந்தால், அது அரசியல் முடிவுகளையும் பாதிக்கக்கூடும் என்பதால், மாலை வாக்குப்பதிவு முடிவடையும்போது அது எத்தனை சதவீதமாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமாக எழுந்துள்ளது. தமிழகத்தின் வாக்கு சதவீத வரலாறு இந்த கேள்வியை புரிந்துகொள்ள முதலில் தமிழகத்தின் வாக்கு சதவீத வரலாற்றைப் பார்க்க வேண்டும். கடந்த சில சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் வாக்காளர் வருகை பொதுவாக 70 சதவீதத்துக்கு அருகிலோ அல்லது அதற்கும் மேலோ இருந்துள்ளது. 2016 சட்டசபை…

Read More

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,262 கோடி என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாட்டின் வாக்காளர் தீவிரத் திருத்தப் (SIR) பணிக்கு பிறகு 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7, 728 பேர்…

Read More