Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கக் கோரிய வழக்கில் இன்று (டிச. 19) தீர்ப்பு!
    தமிழ்நாடு

    அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கக் கோரிய வழக்கில் இன்று (டிச. 19) தீர்ப்பு!

    Editor web1By Editor web1December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    HC 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (டிச. 19) தீர்ப்பு வழங்குகிறது.

    கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.  இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.

    இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறையில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அதிமுக மற்றும் தவெக பதில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை இன்று (டிச. 19) நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) வெளியீடு!
    Next Article புதிய ஊரக வேலை உறுதி மசோதா… நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
    Editor web1
    • Website

    Related Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    July 27, 2026

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.