Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!
    தமிழ்நாடு

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    Editor web2By Editor web2July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 27 20h21m12s936
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் களியக்காவிளை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கனிம வள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக இன்று, லாரிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் வகையில் ஊர்வலமாக செல்லப் போவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியிலிருந்து லாரிகளுடன் ஊர்வலமாக வந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை, தமிழக எல்லைக்குள் நுழைய போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    vlcsnap 2026 07 27 20h21m18s532

    போராட்டக்காரர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கனிம வள லாரிகள் கேரளாவுக்குச் செல்ல முடியாததால், வங்கிகளில் வாங்கிய வாகனக் கடன்களின் மாதத் தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குடும்பங்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும், நான்கு வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வரை தற்போதைய தடை நீடிக்கும் என்று அதிகாரிகள் கூறிவருவதாகவும், அதற்கு மாற்றுத் தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, போக்குவரத்து மீண்டும் சீரானது.

    Kanyakumari LorryProtest MineralTransport TamilNaduNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
    Next Article கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.