Author: Editor web1
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அரசின் கடமை என்ற நிலையில், ஜோதிடப் பின்னணி கொண்ட ஒருவரை தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக நியமித்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஜோதிடராக அறியப்படுபவர். இவர்தான் விஜய்க்கு சமீப காலமாக ஜோதிடம் பார்த்து வந்தவர். இந்த நிலையில் அவரது இந்த நியமனம் அரசு நிர்வாகத்தில் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஊடுருவ வழிவகுக்கும் என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அரசுச் செலவில் ஒரு ஜோதிடரை அதிகாரியாக நியமிப்பது, மக்களிடையே அறிவியல் சிந்தனைக்கு மாறாக, ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகளையே வலுப்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். “ஜோதிடம் தனை இகழ்” என்ற பாரதியாரின் வரிகளைச் சுட்டிக்காட்டும் அவர்கள், பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டிய அரசு, இத்தகைய முடிவை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர். மேலும், ஒரு ஜோதிடர் அரசியல்…
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு விவாதம் இப்போது பற்றியெரிகிறது. “தமிழகத்தில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக முடியுமா?” என்ற கேள்வி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் இன்றைய பேட்டி மற்றும் அறிக்கைக்குப் பிறகு பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கு முன்னதாக, திருமாவளவனை முதல்வராக்கச் சில கட்சிகள் முயன்றதாக எழுந்த செய்திகளும், அதற்கு அவர் அளித்த விளக்கமும் தமிழக அரசியலின் ஆழமான வேரூன்றிய சமூகச் சிக்கல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளன. திருமாவளவனின் வேதனை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அதிமுக, திமுக மற்றும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து உங்களை முதலமைச்சராக முயன்றதாக கூறப்பட்டதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், அதிகாரபூர்வமாக அப்படி ஒரு தகவல் இரு கட்சிகளிடமும் இருந்து வரவில்லை என மறுத்தார். இந்த நிலையில்தான், இந்த செய்தியாளர்…
தன்னை தமிழக முதலமைச்சராக முன்மொழிந்து இரு முக்கிய அரசியல் கட்சிகள் அணுகியதாக கூறப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு 108 இடங்களே கிடைத்ததால், அந்த கட்சி பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தது. இதனிடையே தவெக ஆட்சி அமைக்க வரவிடாமல் தடுப்பதற்காக திமுக – அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று ‘டீல்’ பேசப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம், திமுக – அதிமுக ஆதரவுடன் திருமாவளவனை முதலமைச்சராக்க ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இன்னொரு தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச்…
தமிழக அரசியலில் “இரட்டை இலை” சின்னம் மீண்டும் ஒருமுறை பிளவுபடும் அபாயத்தைச் சந்தித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு பெரும் அணி திரண்டுள்ளது, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் 30 எம்.எல்.ஏ-க்கள் தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று ஒரு கடிதத்தை வழங்கியுள்ளார். அதில், “அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆதரவாக 47 அதிமுக எம்.எல்.ஏக்களில் 30 பேர் கையெழுத்திட்டிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மறுபுறம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெறும் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கடிதம் அளித்துள்ளனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் வேலுமணி பக்கம் சாய்ந்துள்ளதால், அதிமுக அதிகாரப்பூர்வமாக இரு…
தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுத் தருணம். திராவிட அரசியலின் 60 ஆண்டுகாலச் சங்கிலியை உடைத்து நடிகர் விஜய் ஆட்சிக் கட்டிலைப் பிடித்துள்ள சூழலில், தமிழக சட்டமன்றம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் திமுக, தற்போது தனது அடுத்தகட்ட காயை நகர்த்தியுள்ளது. திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக தலைமையின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் “விஜய் Vs உதயநிதி” என்கிற நேரடிப் போரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவி அல்ல; அது ஆளுங்கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் கூர்மையாகக் கவனித்து, விவாதக் களத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய பொறுப்புடையது. திமுகவின் போராட்ட வரலாறு எதிர்க்கட்சியாக இருக்கும்போது மிகத் திறமையாக ‘அடித்து ஆடக்கூடிய’ கட்சி திமுக. இதற்குச் சில வரலாற்றுச் சான்றுகள்…
தமிழக ஆளுநருடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தவெகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக அதிகரித்தது. தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) விசிக (2) மற்றும் ஐயூஎம் எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் அர்லேகரை சந்திக்க சென்ற விஜய்க்கு, ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாதி வழியிலேயே தனது வீடு திரும்பினார். இது குறித்த தகவல் பரவியதும், ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்படக்கூடாது என்றும், உடனடியாக அவரை பதவியேற்க அழைக்க வேண்டும்…
ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தவெகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைக்கும் உரிமையை விஜய் ஆளுநரிடம் கோர உள்ளார். தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) விசிக (2) மற்றும் ஐயூஎம் எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது. இன்று விசிக தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். ஆதரவு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் நேரில் வழங்கினார். இந்த முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா “வெற்றி… வெற்றி…” என மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். தொடர்ந்து…
தவெகவுக்கு ஆதரவளிக்க விசிக தரப்பில் பல்வேறு பதவிகளை கோரி நிபந்தனைகள் விதித்து வருவதாக பரவி வரும் தகவல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க, காங்கிரஸ் (5) மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ( தலா 2) ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் 2 இடங்களைப் பெற்றுள்ள விசிக-வின் ஆதரவை எதிர்நோக்கி விசிக தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த நிலையில், விசிக ஆதரவளிக்க வேண்டுமானால், துணை முதலமைச்சர் பதவி மற்றும் முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என விசிக எம்.எல்.ஏ. வன்னியரசு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது இந்த விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்தது. இந்த சூழலில் அறிக்கை வெளியிட்டுள்ள ரவிக்குமார், “விசிக பல்வேறு பதவிகளை நாடுவதாகவும், கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தற்போது…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை திரட்டுவதில் அக்கட்சி திணறி வருகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு அருகில் இருந்தாலும், இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்தச் சூழலில் அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ. காமராஜ் , தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுத்ததாக தவெக தரப்பில் வெளியான வீடியோ -தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடி வீடியோ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில், “விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தவெக சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அமமுக எம்.எல்.ஏ. காமராஜின் ஆதரவு கடிதம் மற்றும் அவர் காரில் கையெழுத்திடும் வீடியோ மோசடியானது எனவும், இதனை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டதாகவும்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை தவெக தனியாகப் பெறவில்லை. இதனால், அடுத்த ஆட்சியை யார் அமைப்பார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தற்போது தமிழக அரசியலின் “கேம் சேஞ்சர்” ஆக மாறியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்க சம்மதித்திருந்த நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான கூடுதல் எண்ணிக்கையை உறுதி செய்வதில் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சிகளின் ஆதரவு தீர்மானிக்கும் காரணியாக மாறியது. விஜய் நேரடியாக திருமாவளவனைத் தொடர்புகொண்டு ஆதரவு கோரியதைத் தொடர்ந்து திருமாவளவன், இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை…