Close Menu
    What's Hot

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜோதிடருக்கு அரசு பதவியா..? விஜய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
    Featured

    ஜோதிடருக்கு அரசு பதவியா..? விஜய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

    Editor web1By Editor web1May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay astrologer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அரசின் கடமை என்ற நிலையில், ஜோதிடப் பின்னணி கொண்ட ஒருவரை தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக  நியமித்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஜோதிடராக அறியப்படுபவர். இவர்தான் விஜய்க்கு சமீப காலமாக ஜோதிடம் பார்த்து வந்தவர். இந்த நிலையில் அவரது இந்த நியமனம் அரசு நிர்வாகத்தில் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஊடுருவ வழிவகுக்கும் என்ற அச்சத்தை சமூக ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

    அரசுச் செலவில் ஒரு ஜோதிடரை அதிகாரியாக நியமிப்பது, மக்களிடையே அறிவியல் சிந்தனைக்கு மாறாக, ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகளையே வலுப்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். “ஜோதிடம் தனை இகழ்” என்ற பாரதியாரின் வரிகளைச் சுட்டிக்காட்டும் அவர்கள், பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டிய அரசு, இத்தகைய முடிவை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர். மேலும், ஒரு ஜோதிடர் அரசியல் ஆலோசனைகளை வழங்குவது நிர்வாகத் திறனைப் பாதிக்கும் என்பதும் இவர்களின் கருத்தாக உள்ளது.

    த.மு.எ.ச கண்டனம்

    இந்த நியமனத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் (த.மு.எ.ச) தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவின்படி, குடிமக்களிடையே அறிவியல் மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்ப்பது அரசின் கடமை. ஒரு ஜோதிடரை அதிகாரப்பூர்வப் பதவியில் அமர்த்துவது இந்தச் சட்ட நோக்கத்திற்கு எதிரானது.

    தமிழ்நாடு நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வரும் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை மரபுக்கு இந்த நியமனம் ஒரு சறுக்கலாக அமையும். அரசியல் ஆலோசனைகள் என்பது தரவுகள் (Data) மற்றும் கள எதார்த்தங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கக் கூடாது.

    எனவே மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் இந்த நியமனத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”பாட்ஷா-வாக மாறிய விஜய்”!. முதல்வர் கையில் முத்தம் கொடுத்து வரவேற்ற லீமா ரோஸ்!.
    Next Article இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு – பெரும்பான்மையை நிரூபிக்குமா விஜய் அரசு?
    Editor web1
    • Website

    Related Posts

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    July 1, 2026

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    July 1, 2026

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.