Close Menu
    What's Hot

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோசடி வீடியோ … தவெக மீது டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!
    Featured

    மோசடி வீடியோ … தவெக மீது டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

    Editor web1By Editor web1May 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TTV dinakaran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை திரட்டுவதில்  அக்கட்சி திணறி வருகிறது.

    108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு அருகில் இருந்தாலும், இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

    இந்தச் சூழலில் அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ. காமராஜ் , தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுத்ததாக தவெக தரப்பில் வெளியான  வீடியோ -தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோசடி வீடியோ

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில், “விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தவெக சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அமமுக எம்.எல்.ஏ. காமராஜின் ஆதரவு கடிதம் மற்றும் அவர் காரில் கையெழுத்திடும் வீடியோ மோசடியானது எனவும், இதனை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டதாகவும் தினகரன்  மேலும் கூறினார்.

    “ஒரிஜினல் கடிதத்தையும் வீடியோவையும் தவெகவினர் வெளியிடட்டும். எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டப் பார்க்கின்றனர்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    காமராஜ் தனது ஒப்புதலின்றி எந்தக் கடிதத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், அமமுக அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் தினகரன் வலியுறுத்தினார்.

    போலீசில் புகார்

    , “காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஏஐ-ஆகக் கூட இருக்கலாம். விஜயா? புஸ்ஸி ஆனந்தா? செங்கோட்டையனா? யார் இந்த வீடியோவை எடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆளுநரிடம் போலி கடிதத்தின் புகைப்படத்தை (WhatsApp லெட்டர்) சமர்ப்பித்த தவெகவினர், ஒரிஜினலைக் கேட்டதும் ஓடிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    தவெக தரப்போ தங்களுக்கு காமராஜ் ஆதரவு அளித்ததாக வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தினகரன் இதை ஏற்க மறுத்து, அசல் ஆதாரங்களை வெளியிட வலியுறுத்தி வருகிறார். அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தினகரனுடன் இணைந்து ஆளுநரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சர்ச்சை தமிழக அரசியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஆட்சி அமைப்பதில் தவெக எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போலி ஆதரவு குற்றச்சாட்டு விஜய்க்கு  பின்னடைவாக கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
    Next Article காங்கிரசை சேர்த்ததால் சிக்கல் – டி.கே.எஸ். இளங்கோவன் சொல்வது இதைத்தானா?
    Editor web1
    • Website

    Related Posts

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    July 1, 2026

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    July 1, 2026

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.