Close Menu
    What's Hot

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய் ஆட்சியமைக்க விசிக – இடதுசாரிகள் நாளை ஆதரவு கடிதம்?
    Featured

    விஜய் ஆட்சியமைக்க விசிக – இடதுசாரிகள் நாளை ஆதரவு கடிதம்?

    Editor web1By Editor web1May 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிக்கட்சியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், முழுமையான பெரும்பான்மையை எட்ட தவெகவுக்கு இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 5 எம்.எல். ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஆதரவு வழங்கிவிட்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளிடன் விஜய் ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,  “மீண்டும் தேர்தல் வரக் கூடாது” என்ற அடிப்படையில் தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

    நாளை ஆதரவு கடிதம்

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை கடிதம் வாயிலாக வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கருத்தே இந்த முடிவின் மையமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக மக்கள் இந்த தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அதனால், எந்தக் கட்சியும் தங்களது அரசியல் பிடிவாதத்திற்காக மாநிலத்தை மீண்டும் தேர்தலுக்கு இழுத்துச் செல்லக் கூடாது என்பதே விசிக மற்றும் இடதுசாரிகளின் நிலைப்பாடாக உள்ளது.

    மேலும், ஒரு தேர்தலை நடத்த அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்த நிலையில், மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல், நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தவெக நினைப்பது என்ன?

    அதேநேரத்தில், இந்த ஆதரவு முழுமையான அரசியல் கூட்டணியாக இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மொழி பாதுகாப்பு போன்ற கொள்கை அடிப்படைகளில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பணியாமல் மாநில உரிமைகளை காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் இடம்பெற்றிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    தவெக தரப்பும் இந்த ஆதரவைக் கவனமாக அணுகி வருவதாக கூறப்படுகிறது. காரணம், புதிய கட்சியாக ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், அனுபவமுள்ள கட்சிகளின் ஆதரவு அரசியல் நிலைத்தன்மைக்கு உதவும் என்ற புரிதல் தவெக வட்டாரங்களில் உள்ளது.

    புதிய அரசியல் கூட்டணி

    அதேவேளை, இந்த அரசியல் நகர்வு திமுக கூட்டணிக்குள் புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விசிக தலைவர், திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது, ”அவசரப்பட வேண்டாம். திமுக கூட்டணியிலேயே தொடருங்கள்” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை திமுக அணியில் இருந்த இந்த கட்சிகள் தற்போது தவெக பக்கம் நகரும் சாத்தியம் உருவாகியிருப்பது, அறிவாலய வட்டாரத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் திறனாய்வாளர்கள், ”இது சாதாரண ஆதரவு அரசியல் அல்ல; தமிழகத்தில் புதிய அரசியல் மையம் உருவாகிறதற்கான அறிகுறியாக இருக்கலாம்” எனக் கூறி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் இருந்த தமிழ்நாடு, தற்போது புதிய கூட்டணி கணக்குகளுக்குள் நகரத் தொடங்கியிருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.

    மொத்தத்தில், விசிக மற்றும் இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள தகவல், தமிழக அரசியலில் அடுத்த கட்ட ஆட்சிக் கணக்கை முற்றிலும் மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசியலின் அடுத்த பாதையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா. முகிலன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் பதவியேற்க முடியாததற்கு பாஜகதான் காரணம் என மக்கள் சந்தேகிப்பார்கள் – நடிகை கஸ்தூரி
    Next Article விஜய்க்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம் – சென்னையில் செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது
    Editor web1
    • Website

    Related Posts

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    July 1, 2026

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    July 1, 2026

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.