Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
    Featured

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    Editor web1By Editor web1May 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 15 18h14m40s482
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, தங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த ஆறு நாட்களில் தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும், முந்தைய அரசின் பழைய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    தமிழகத்தில் மதுக்கடைகளை மூட படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பது குறித்து முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றார்.

    நீட் தேர்வு  வியாபாரமாகிவிட்டது

    கல்வித்துறை குறித்துப் பேசுகையில், நீட் தேர்வை மத்திய அரசால் கூட சரியாக நடத்த முடியவில்லை என்றும், இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் சாடிய அவர், நீட் தேர்வு என்பது தற்போது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டதாகவும், எனவே நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தங்களின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வால் எந்தவொரு பயனும் இல்லை, அது முற்றிலும் தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு நடத்தப்படும் ஒரு தேர்வையாவது மத்திய அரசு முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும், எடப்பாடி பழனிச்சாமியும் மு.க.ஸ்டாலினும் சில தொழிலதிபர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சித்ததாகவும், இது தொடர்பாகத் தங்களது ஆதரவாளர்களுடன் அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஆனால், மக்களுக்கு எதிராகச் செல்ல வேண்டாம் என சில முக்கிய தலைவர்கள் கூறியதால் அந்த முயற்சி மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…
    Next Article “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?
    Editor web1
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.