Close Menu
    What's Hot

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகை!
    அரசியல்

    தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகை!

    Editor web1By Editor web1May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Raj bhavan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படுவதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) அதிரடியாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசியல் மரபுகளில் பல காலங்களாக நிலைத்து வரும் உயரிய நடைமுறை, எந்த அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே ஆகும். அது வெறும் நிகழ்ச்சி நடைமுறை அல்ல. தமிழர் இனத்தின் மொழி மரியாதை, பண்பாட்டு அடையாளம் மற்றும் வரலாற்றுப் பெருமையின் உயிர்ப்பாகும்.

    ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தியுள்ளது.

    இது சாதாரண நிர்வாகத் தவறோ அல்லது நிகழ்ச்சி ஒழுங்குப் பிழையோ அல்ல. கேரளா ஆளுநராகவும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் அவ்வப்போது வந்து செல்லக்கூடிய ஆளுநர் இராசேந்திர அர்லேக்கர் அவர்கள் தொடர்ச்சியாகத் தமிழ்மொழி, தமிழர் மரபு மற்றும் தமிழ்நாட்டு உரிமை உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, பாசிச பாஜக அரசின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் கைப்பாவையாகவே செயல்படுகிறார் என்பது மேலும் தெளிவாகியுள்ளது.

    Portfolios Allocated to 23 New Ministers

    அதே நேரத்தில், புதிய அரசாங்கம் இதனைத் தடுக்க முடியாத வலிமையற்ற நிலையிலா இருக்கிறது? என்றக் கேள்வியும், இந்த அவமதிப்புக்கு அமைதியாக இணங்கியதா? என்றச் சந்தேகமும் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்மொழி மரியாதைத் தொடர்பான விஷயங்களில் அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதது கவலைக்குரியது.

    எனவே, இந்த நிகழ்வில் ஏற்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்கு ஆளுநரும், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பொறுப்பான அரசுத் தரப்பும் உடனடியாகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

    இனி வரும் காலங்களில் எந்த அரசு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதைத் தொடர்பான பாரம்பரிய நடைமுறைகள், எந்த சூழலிலும் மீறப்படாத வகையில் சட்டபூர்வமான மற்றும் கட்டாயமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

    velmurugan

    அதே நேரத்தில், பாசிச பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர் ராசேந்திர அர்லேக்கர் அவர்களின் தமிழ் சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து, விரைவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜ்யசபா தேர்தல் பரபரப்பு: அண்ணாமலைக்கு ஆந்திராவா? தவெக எம்.பி யார்?
    Next Article சீமானுக்கு 2-வது குழந்தை..!! வீட்டிற்கு வந்த தேவதை..!! மகிழ்ச்சியில் நாதக தொண்டர்கள்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026

    தொழில் முதலீடு சர்ச்சை: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? திமுகவுக்கு சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

    June 20, 2026

    புதிய அரசியல் அலை..!! தவெகவில் இணைந்த 2500 பேருக்கு உரிய அங்கீகாரம்..!! ஆதவ் அர்ஜுனா உறுதி..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    கட்டண தகராறு!. சுங்கச்சாவடி ஊழியரை 12 கி.மீ இழுத்து சென்ற கார்!. மே.வங்கத்தில் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.