Author: Editor web1

முதலமைச்சர் விஜய்யின் உத்தரவையடுத்து, காவல் அதிகாரிகளுடன் தினமும் 2 மணி நேரம் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தொடக்கத்திலேயே கிள்ளியெறியவும், தமிழகக் காவல் துறையில் மிக முக்கிய மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தினசரி 2 மணி நேரம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கள நிலவரங்களைக் கேட்டறிய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. டிஜிபி தலைமையிலான உயரதிகாரிகள், தினசரி 2 மணி நேரம் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும்…

Read More

19-வது ‘ரோஜ்கார் மேளா’ (Rozgar Mela) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேர்ந்த 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். காணொளி காட்சி வாயிலான நிகழ்வு, நாடு முழுவதும் 47 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் ரயில்வே, உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நிதிச் சேவைகள் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பணியில் சேர உள்ளனர். இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, இதுவரை 18 கட்டங்களாக சுமார் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் ‘விக்சித் பாரத்’ (Viksit Bharat – வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். உலக நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும்…

Read More

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகத்தின் 80வது ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு அண்ணா கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியின் இறுதியில் மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் தற்போதைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை தற்போது ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த நிதி நெருக்கடியில் இருந்து வாரியத்தைச் சீரமைக்க வேண்டியது அவசியமானது என்றார். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம்…

Read More

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மே 24 மற்றும் 25) 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட 19 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை. மே 26-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி,…

Read More

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு அனுமதி காலம் முடிவடைந்தும் கள்ளத்தனமாகச் செயல்பட்டு வந்த கல்குவாரியில், கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு 5 லாரிகளைப் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி காலாவதியான கல்குவாரி ஒன்று, அரசுக்குத் தெரியாமல் தொடர்ந்து இயங்கி வருவதாகக் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தக் குவாரியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கனிம வளங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில், கனிம வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி பாறை கற்களை ஏற்றிக்கொண்டு வந்த 5 லாரிகளைக் கண்ட அதிகாரிகள்,…

Read More

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419 போதைப் பொருள் குற்றவாளிகள் என 1,263 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியான சூழலை உருவாக்கவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வரலாற்றுப் பதிவேட்டில் உள்ள ரவுடிகள் 488 பேர் மற்றும் வரலாற்றுப் பதிவேட்டில் இல்லாத ரவுடிகள் 356 பேர் என மொத்தம் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் காவல்துறையினரால் பறிமுதல்…

Read More

கார் ரேசர் என்பதை தாண்டி கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் அஜித்… திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை மனைவி, மகன், மகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்த கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது பன்முகத் திறமைகளை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு, அவர் மீண்டும் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் மூலம் அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பரபரப்பான அனுபவத்தைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நடிகர் என்னும் அடையாளத்தைத் தாண்டி அஜித்குமார் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி.’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சேம்பர்) பதிவு செய்துள்ளார். விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில்…

Read More

காங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் வழியாகப் பயணம் செய்த சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பாளர்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் (Ebola Virus Disease – EVD) உலக சுகாதார அமைப்பை (WHO) கவலைக்குள்ளாக்கியுள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கொடிய தொற்று, குறிப்பாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. Bundibugyo வகை எபோலா வைரஸ் தொடர்பான இந்த பரவல், உயிரிழப்புகளை அதிகரித்து, சர்வதேச அளவில் அவசர நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு நேற்று இதை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசர நிலை (PHEIC) என அறிவித்தது. இதுவரை நூற்றுக்கணக்கான சந்தேக நோயாளிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பரவல் தேசிய அளவில் விரிவடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எபோலா அறிகுறிகளான…

Read More

கொடைக்கானலில், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் 63-வது புகழ்பெற்ற மலர்க்  கண்காட்சியைக் காணத் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். பரதநாட்டியமும் மலர் அலங்காரங்களும் மலர்க் கண்காட்சியின் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறை நடத்தும் கோடை விழாவின் 2-வது நாளான இன்று காலையில் வண்ணமயமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, பூங்காவிற்கு வந்திருந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது. இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்னேஷன் மற்றும் ரோஜா மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘பன்முகத் திறமையின் சின்னம் நீயடி’ என்ற பிரம்மாண்ட மலர் மங்கை சிற்பம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், காதல் ஜோடிகளைக் கவரும் விதமாக மலர்களால் ஆன இதய…

Read More

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியாகராஜன். புதிய அரசியல் மாற்றம், மக்கள் நலம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துத் தேர்தலைச் சந்தித்த இவர், பதவிப் பிரமாணம் எடுத்த கையோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மக்கள் குறைகளைத் தீர்க்கும் மையமாக விளங்க வேண்டிய அரசு அலுவலகத் திறப்பு விழாவில் தியாகராஜன் நடந்துகொண்ட விதம் தொகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது பொதுவாக ஒரு மக்கள் பிரதிநிதியின் அலுவலகத் திறப்பு விழா என்றால், அங்கு தொகுதி மக்கள் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலைப்படுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனோ, தொகுதி மக்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தனது குடும்பத்தினரையே முன்னிலைப்படுத்தியுள்ளார். அலுவலகத்தின்…

Read More