Close Menu
    What's Hot

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கை!
    Featured

    இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கை!

    Editor web1By Editor web1May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மே 24 மற்றும் 25) 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட 19 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை.

    மே 26-ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மே 24 முதல் 27-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனுமதி முடிந்தும் செயல்பட்ட கல்குவாரி; கள்ளத்தனமாக கற்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்!
    Next Article மின்வாரியத்தில் ரூ.2,000 கோடி டெண்டர்கள் நிறுத்தி வைப்பு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
    Editor web1
    • Website

    Related Posts

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    July 17, 2026

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.