Close Menu
    What's Hot

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“12 நாளில் இப்படியா..?” – ஆளும் தவெக அரசு மீது பாய்ந்த உதயநிதி
    Featured

    “12 நாளில் இப்படியா..?” – ஆளும் தவெக அரசு மீது பாய்ந்த உதயநிதி

    Editor web1By Editor web1May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanidhi vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் உடல் மீட்கப்பட்டதிலிருந்து கோவை மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுதுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

    “கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகத்தனமான செயலைச் செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். மேலும், “இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து கோவை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, திமுக அவர்களுக்கு துணையாக நிற்கும்” என்றும் உதயநிதி தெரிவித்தார்.

    புதிய அரசு பொறுப்பேற்று வெறும் 12 நாட்களுக்குள் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் கேள்விக்குறியாக்கியுள்ளது” என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். “இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என முதல்வர் விஜய்யை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!
    Next Article “பாஜகவின் பேராசை அடங்கவில்லை”!. பெட்ரோல் விலையால் கொதித்தெழுந்த கார்கே!
    Editor web1
    • Website

    Related Posts

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    ` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.