Close Menu
    What's Hot

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
    Featured

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 aadva
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 2026 அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில். அன்புமணி அண்ணன் என்று சொல்லி வரவேற்றார். அன்புமணி அண்ணன் பெயருக்கு ஏற்ப எப்போதும் கோபமான வார்த்தை கூட அன்பாகவே இருக்கும். புதிய தலைமுறை அரசியல் தலைவர்களில் முக்கியமான ஆளுமை என்றார்.

    நேற்று விளையாட்டுத்துறை கூட்டம் நடைபெற்றது. அதில் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் சரி செய்யுங்கள் என்று தான் நம் முதலமைச்சர் சொன்னார். போதைக்கு எதிராக விளையாட்டை கொண்டு செல்ல நினைக்கிறார்.

    தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இப்போது பங்கேற்பதற்கு சரியான தலைமை இருந்ததே காரணம்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லாரும் விளையாட்டில் சேர வேண்டும்.

    இளைஞர்கள் அதிக சதவீதம் உள்ள நாட்டில் விளையாட்டு மேம்படுத்தப்பட வேண்டும். ஒரு தேசிய விளையாட்டு நடத்துவதற்கு கூட நம்மிடம் விளையாட்டு மைதானம் இல்லை.

    கூடிய விரைவில் பட்ஜெட்டில் ஒரு நல்ல தொகை ஒதுக்கப்பட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்

    இன்னும் 3 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான தலைமை ஸ்போர்ட்ஸ் ஹப்(International capital sports hub) ஏற்படுத்தப்படும்.

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்க நேற்று ஆலோசிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுகள் பயிற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருப்பது போன்று அதற்கான பயிற்சியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது.

    023 aadva a

    மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கில் உள்ள வீரர்களுக்கான தங்கும் இடங்கள் முழுவதுமாக குளிர்சாதன வசதிகள் ஏற்பாடு செய்ய முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்

    விளையாட்டு வீரர்களுக்கு  புரோட்டின் சார்ந்த உணவுகள் இருக்க வேண்டும்.  மத்திய அரசின் சாய் விடுதியில் இருப்பது போல் அனைத்து உணவு ஏற்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது.

    இந்த 30 நாட்களில் 12 கோடிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. Politics தான் எங்களுக்கு first sports. உறுதியாக 10 அகாடமிக்கள் கொண்டுவரப்பட உள்ளது.

    நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே தர்மபுரி, திருநெல்வேலியில் அகாடமிகள் வர உள்ளன. போதை, ஆல்கஹால் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் அகாடமிக்கள் முன்னெடுப்பு எடுக்கப்பட உள்ளது.

    பேட்மிண்டன் போட்டியில் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு வீரர் தமிழகத்தில் உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படும்

    ஒலிம்பிக்கில் 2036 இல் குறைந்தபட்சம் ஒலிம்பிக் போட்டியில் 15 பதக்கங்கள் பெற வேண்டும் என்பது நம் இலக்கு.

    ஒலிம்பிக் அகாடமியில் பேட்மிண்டன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

    Sports for Everyone என்ற பெயரில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.

    ஐபிஎஸ்,ஐஏஎஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அணி என்ற வகையில் போட்டிகள் நடத்த திட்டமிடுகிறோம்

    6000 உடற்கல்வி ஆசிரியர்களை தயார் செய்து வருகிறோம், பெரிய கூட்டம் நடத்தி முதலமைச்சர் Visionary document கொடுக்கப்பட உள்ளது.

    பள்ளிகளில் கணிதம், இயற்பியல் பாடங்களை எடுக்கும் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடற்கல்வி ஆசிரியருக்கு கொடுப்பதில்லை

    காசிமேடு பகுதி போன்ற கடற்கரையோர பகுதிகளில் நல்ல நீச்சல் வீரரை பெற முடியும், வடசென்னை பகுதிகளில் நல்ல பாக்ஸிங் விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் கோபமாக இருக்கும் இளைஞரை விளையாட்டில் ஈடுபடுத்த முடியும். நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவாக மாற்ற முடியும்.

    தேசிய விளையாட்டுகளை நடத்தும் அளவிற்கு நம்மிடம் கட்டமைப்பு இல்லை. தேசிய அளவிலான விளையாட்டில் நாம் 6, 7 ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று பேசினார்.

    Aadhav Arjuna dharmapuri Olympic Academies Sports Infrastructure Tamil Nadu Sports Tirunelveli
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!
    Next Article PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!
    Editor TN Talks

    Related Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    July 17, 2026

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.