Close Menu
    What's Hot

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?
    தமிழ்நாடு

    ` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    022 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    2026 அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிட்டன் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேஷன் தலைவர் எம் பி அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேசன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர், மேலும் நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் லதா, பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    022 anbumani A

    இந்த போட்டி ஜூலை 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு நாடு முழுவதிலிருந்தும் வீரர் வீராங்கனைகள் மிகுந்த ஆர்வத்துடன் ஒட்டுமொத்தமாக 1452 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றை தேர்வில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டுள்ளது.

    இதில் ஆண்கள் ஒற்றைய பெண்கள் ஒற்றையர் ஆண்கள் இரட்டையர் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகி 5 பிரிவுகளில் இந்தியாவின் முன்னணி சீனியர் வீரர் வீராங்கனைகள் தேசிய தரவரிசை புள்ளிகளுக்காக மோத உள்ளனர்.

    நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் சார்பில் தேசிய பேட்மிண்டன் ரேங்கிங் போட்டி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது.

    1600 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சமீப காலத்தில் இந்தியாவில் இவ்வளவு பேர் பங்கேற்ற பேட்மிண்டன் போட்டி நடைபெறவில்லை.

    இன்று தமிழகத்தில் சென்னையில் இவ்வளவு பேர் பங்கேற்கும் போட்டி நடக்கிறது.

    இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவலகமே இங்குதான் உள்ளது என்று தெரிகிறது.

    இது வித்தியாசமான மாற்றம் இதை வரவேற்க வேண்டும் ஒட்டுமொத்தமாக வேறுபட்ட முன்னெடுப்பு.

    இதற்கு முன்பு தமிழகம் பல்வேறு விளையாட்டு துறை அமைச்சர்களை பார்த்திருக்கிறது.

    விளையாட்டுத்துறை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் .

    தமிழகத்தில் பேட்மிண்டன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பிறகு வேகமாக  வளர்ந்து வரும் விளையாட்டு இது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள்.

    ஒரு நல்ல உடல் நலம் இருக்க வேண்டும் என்றால் விளையாட்டு மிக முக்கியம். 18 முதல் 19 வயதில் எல்லாம் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

    ஆரோக்கியமான உடல்நலத்தை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும். நம் முதலமைச்சர் கூட இரண்டு வாரத்திற்கு முன் மாரத்தானில் பங்கேற்றார்.

    முன்பு பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டிருக்கலாம் இப்போது உணர்வு பூர்வமாக உள்ளது.

    போதைப் பொருட்கள் தீய பழக்கங்கள் விட்டுவிட்டு விளையாட்டில் முக்கியத்துவம் கொடுத்தால் யாரும் அதில் செல்ல மாட்டார்கள்.

    கிரிக்கெட்டை தவிர எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதைவிட அதிக விளையாட்டுகள் உள்ளது.

    இந்த 5 ஆண்டுகளில் தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக பதக்கங்கள் பெற்று வருகிறார்கள்.

    தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசனுக்கு சென்னை அல்லது சென்னைக்கு அருகில் அகாடமி வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

    வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வருவார் அமைச்சர் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதிக அளவில் சர்வதேச விளையாட்டுகளை கொண்டுவாருங்கள் நம் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்

    இவ்வாறு அன்புமணி கூறினார்.

    Anbumani Ramadoss DMK PMK Tamil Nadu Politics Tamil Nadu Sports Minister Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article” ’மினிஸ்டர் கட்டிங்’: பத்திரப்பதிவுத் துறையில் நடந்த வசூல் வேட்டை”
    Next Article தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!
    Editor TN Talks

    Related Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    July 17, 2026

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.