Close Menu
    What's Hot

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!
    தமிழ்நாடு

    மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தியில் பதிவிட்டுள்ளதாவது, புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது?

    யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்,

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉணவக பெண் ஊழியர் மீது தாக்குதல்!. தவெக நிர்வாகி மகன் மீது புகார்!. சிசிடிவி காட்சிகள் அழிப்பு!
    Next Article “12 நாளில் இப்படியா..?” – ஆளும் தவெக அரசு மீது பாய்ந்த உதயநிதி
    Editor web3
    • Website

    Related Posts

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    July 16, 2026

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    July 16, 2026

    ` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    ` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?

    ” ’மினிஸ்டர் கட்டிங்’: பத்திரப்பதிவுத் துறையில் நடந்த வசூல் வேட்டை”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.