Close Menu
    What's Hot

    முதல்வர் விஜயின் கிரீன் சிக்னல்? மகளிருக்கு ரூ.2500 திட்டம் பட்ஜெட்டில் வெளியாகுமா?

    கழுத்து, கை நிறைய 3 கிலோ தங்கம்!. குத்தாட்டம் போட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவர்!

    நியூசிலாந்தின் தென் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு..!! மக்கள் பீதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உணவக பெண் ஊழியர் மீது தாக்குதல்!. தவெக நிர்வாகி மகன் மீது புகார்!. சிசிடிவி காட்சிகள் அழிப்பு!
    தமிழ்நாடு

    உணவக பெண் ஊழியர் மீது தாக்குதல்!. தவெக நிர்வாகி மகன் மீது புகார்!. சிசிடிவி காட்சிகள் அழிப்பு!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirupur tvk attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளியை தவெக நிர்வாகியின் மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் எழுந்துள்ளது.

    தாராபுரம் அருகேயுள்ள குள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த லதா (40).  கணவனை இழந்த பெண், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக சர்ச் சாலையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த உணவகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர் கராத்தே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

    சமீபத்தில், உணவகத்தில் பணி நிமித்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஹரிஹரன் அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி, காதின் அருகே பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த லதாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த வாடிக்கையாளர்களும், லதாவின் உறவினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் போலீசாரிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும், ஆதாரங்களை மறைப்பதற்காக அவை அழிக்கப்பட்டிருப்பதாகவும் லதாவின் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாராபுரம் காவல் துறையினர் லதா மற்றும் ஹரிஹரன் ஆகிய இருதரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் பயங்கரம்!. விவசாயி மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு!. முதுகில் பாய்ந்த 10 குண்டுகள்!
    Next Article மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?. சீமான் ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் விஜயின் கிரீன் சிக்னல்? மகளிருக்கு ரூ.2500 திட்டம் பட்ஜெட்டில் வெளியாகுமா?

    July 16, 2026

    கழுத்து, கை நிறைய 3 கிலோ தங்கம்!. குத்தாட்டம் போட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவர்!

    July 16, 2026

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜயின் கிரீன் சிக்னல்? மகளிருக்கு ரூ.2500 திட்டம் பட்ஜெட்டில் வெளியாகுமா?

    கழுத்து, கை நிறைய 3 கிலோ தங்கம்!. குத்தாட்டம் போட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவர்!

    நியூசிலாந்தின் தென் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவு..!! மக்கள் பீதி..!!

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.