Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஒப்புக் கொண்ட ஈரான்?
    உலகம்

    யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஒப்புக் கொண்ட ஈரான்?

    Editor web1By Editor web1May 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது.  உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர்ச் சூழலைத் தணிக்கும் வகையில், 60 நாள் கால அளவிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றவும், எவ்விதக் கட்டணமும் இன்றி கப்பல்கள் தடையின்றிச் செல்ல அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, ஈரான் மீதான துறைமுகத் தடைகளை நீக்கவும், அந்த நாடு தனது எண்ணெயைத் தடையின்றி விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

    போர் நிறுத்தக் காலமான 60 நாட்களில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாகக் கையெழுத்தாகவில்லை என்பதால், இறுதி கட்டத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் நேர்மையாகச் செயல்படத் தவறினால், இந்த 60 நாள் காலக்கெடு முடிவதற்கு முன்பே போர் நிறுத்தம் ரத்தாகக்கூடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிருஷ்ணகிரி அருகே 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு!
    Next Article அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் – பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க SDPI கட்சி வலியுறுத்தல்
    Editor web1
    • Website

    Related Posts

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    July 17, 2026

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    அதிபர் டிரம்ப்பை கொன்றால் 10 மில்லியன் டாலர் பரிசு? ஈராக் குழுவின் அறிவிப்பால் பரபரப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.