Close Menu
    What's Hot

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!
    உலகம்

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    Editor web2By Editor web2July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Burnham
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

    கடந்த மாதம் கெர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு ஆண்டி பர்ன்ஹாமைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. மேக்கர்பீல்டு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக அடுத்த வாரம் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் மூன்றாம் சார்லசிடம் முறையாக வழங்கிய பிறகு, புதிய அரசு அமைக்க பர்ன்ஹாமிற்கு மன்னர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பார்.

    தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் உரையை நிகழ்த்திய ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கப் போகிறோம். கெய்ர் ஸ்டார்மர் அமைத்த அடித்தளத்தின் மீது நின்று தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன். பிரிட்டனை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல இருக்கிறேன். எங்கள் முன்னுரிமைகள் மற்றும் முடிவுகள் எவ்விதத் தயக்கமும் இன்றி ‘தொழிலாளர்’  கொள்கை சார்ந்ததாகவே இருக்கும்” என்று உறுதியளித்தார்.

    மேலும், கடந்த 2024 பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சி மற்றும் சமூகக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், உள்ளூர் வணிகங்கள், பப்கள் மற்றும் கடைகளை மேம்படுத்தவும், பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கப்போவதாகவும், மீண்டும் தொழில்மயமாக்கலை தீவிரப்படுத்தப் போவதாகவும் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    AndyBurnham LabourPartyUK UKPolitics2026 UKPrimeMinister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்
    Next Article பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
    Editor web2
    • Website

    Related Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.