Author: Editor web1
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு, ரகசியம் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13ம் தே வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளாகத்திற்குள் அதிநவீன டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என மக்களவை செயலகம் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தற்போது சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய மற்றும் ரகசியமாகக் கண்காணிக்கப் பயன்படக்கூடிய பின்வரும் சாதனங்களை நாடாளுமன்றத்திற்குள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா பொருத்தப்பட்ட பேனாக்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள், இதர ரகசிய ஆடியோ/வீடியோ பதிவு செய்யும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கையில், தற்போது நாடு முழுவதும் மிக மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல்…
சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வேளச்சேரி 100 அடி சாலையில் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதை உடனடியாக கவனித்த பேருந்து ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடங்களிலேயே, பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நல்வாய்ப்பாக, தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பேருந்திற்குள் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தண்ணீரைப் பாய்ச்சி அடித்து பலத்த போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பள்ளி பேருந்து…
தேசிய அளவில் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் பிரபல சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு திமுக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, டெல்லிக்கு சென்று சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவை தெரிவித்தார். சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்து வருவதால், அவரிடம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக ராசா கூறினார். தான் இறப்பதே இந்த மத்திய அரசின் கண்களைத் திறக்கும் என்றாலோ அல்லது இந்த மண்ணில் ஒரு விழிப்புணர்வை எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலோ அதற்காக தனது உயிரைத் தரவும் நான் தயாராக இருப்பதாக…
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸின் பிரம்மாண்ட திரைப்படம் ‘பௌசி’ டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் வரலாற்றுப் போர் கதைக்களத்தை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் போஸ்டரில், பிரபாஸ் உடலெங்கும் ரத்தக் கறைகளுடன், கையில் துப்பாக்கியை ஏந்தியபடி போர்க்களத்தில் அமர்ந்திருப்பது போன்ற மிரட்டலான தோற்றம் இடம் பெற்றுள்ளது. தனியாகப் போராடும் ஒரு பட்டாளம் என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியப் பின்னணியில் (1940-களில்) நடக்கும் ஒரு தேசபக்தி மற்றும் உணர்வுப்பூர்வமான கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி அறிமுகமாகிறார். மேலும், மிதுன் சக்ரவர்த்தி, அனுபவம் கெர் மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்தபடி, காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் எந்தவொரு புதிய சட்டமாக இருந்தாலும், அது மாநில உரிமைகளையும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையில் அமைந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்பவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும் என்றார். மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும், காவிரி நீர் பகிர்விலும் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்க திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரலெழுப்புவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படுவார்கள்…
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றுள்ளநிலையில், அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தங்கப் பந்து மற்றும் தங்கக் காலணி ஆகிய இரண்டு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைக்க பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடிக்காவிட்டாலும், என்ஸோ பெர்னாண்டஸ் மற்றும் லாடரோ மர்டினெஸ் ஆகியோரின் கோல்களுக்கு 2 அபாரமான அசிஸ்ட்களை வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த 2 அசிஸ்ட்களின் மூலம் பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பேயைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி தங்கக் காலணி பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மெஸ்ஸி. ஃபிஃபா விதிகளின்படி, இரு வீரர்கள் சமமான கோல்களை அடித்திருந்தால், அதிக அசிஸ்ட்கள் செய்தவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் மெஸ்ஸியே முதலிடத்தில் உள்ளார். மேலும், தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும்…
நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கும் திருப்பூரில், துணி நூல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பஞ்சு விலை மீண்டும் உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11% வரி விதிப்பை ரத்து செய்ததால் நூல் விலை குறையும் எனப் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். கடந்த மாதத் தொடக்கத்தில் ரூ.10 வரை குறைந்த நிலையில், ஜூன்…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவணாபுரம் தோட்டத்துச் சாலையில் உள்ள வீட்டில் விவசாயி அருள்குமார் (47), அவரது மனைவி பிருந்தா (35) தனியாக வசித்து வருகின்றனர். அதிகாலை 2 மணியளவில் இவர்களது வீட்டு நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. சத்தம் கேட்டு அருள்குமார் வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்தது. கொள்ளையர்களில் இருவர் அருள்குமார் மற்றும் பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அந்த நேரத்தில் மற்ற இருவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.45,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடிசத்துச் சென்றனர். போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அருள்குமாரின் செல்போனைப் பறித்து உடைத்துச்…
மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு நாளை முதல் ஆன்லைன் ‘சுய கணக்கெடுப்பு’ தொடங்க உள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கான முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணையவழியில் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ நாளை (ஜூலை 17) முதல் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்களின் விவரங்களை ஜூலை 31-ம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம். இதில், மொத்தம் 33 கேள்விகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, குடும்பக் கட்டமைப்பைக் கண்டறியும் வகையில் “குடும்பத்தில் உள்ள தம்பதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?” என்பது உள்ளிட்ட முக்கியக் கேள்விகள் இதில் கேட்கப்படவுள்ளன. ஆன்லைன் வழிப் பதிவு என்பது கட்டாயமில்லை என்றும் அது பொதுமக்களின் வசதிக்காக மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட்…
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், பட்ஜெட் குறித்து பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், விவாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2026-27-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 1½ மாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் அட்டவணை: நிதி அமைச்சர் மரிய வில்சன் முதல் நாளில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அடுத்த நாள், வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள்: தேர்தல் அறிக்கையில்…