Close Menu
    What's Hot

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
    தமிழ்நாடு

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    Editor web1By Editor web1May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    முருகப் பெருமானின் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படும் வைகாசி விசாகத்தன்று, பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இதையொட்டி இன்று (மே 30) அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

    vlcsnap 2026 05 30 17h08m30s297

    கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர். தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இலவசமாகச் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்களின் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற முழக்கத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!
    Next Article விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
    Editor web1
    • Website

    Related Posts

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.