Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வால்பாறை: வீடியோ எடுக்க முயன்றபோது பள்ளத்தில் பாய்ந்த பைக்: ஐடி ஊழியர் உள்பட 2 பேர் பலி!
    தமிழ்நாடு

    வால்பாறை: வீடியோ எடுக்க முயன்றபோது பள்ளத்தில் பாய்ந்த பைக்: ஐடி ஊழியர் உள்பட 2 பேர் பலி!

    Editor web1By Editor web1July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 19 06h53m14s803
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் வால்பாறையில், தனியார் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறைக்குத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி ஆழியார் சோதனைச் சாவடியில் தினசரி 500 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 750 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தவிர்க்கக் காவல்துறையினர் வளைவுகளில் விழிப்புணர்வுப் பலகைகளை வைத்து, பயணிகளை எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    vlcsnap 2026 07 19 06h53m38s097

    இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (23, தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் பூபாலன் (ஐடி நிறுவன ஊழியர்) ஆகிய இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ‘ஐயர்பாடி டிஸ்பென்சரி’ என்ற பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த இயற்கை எழிலைக் பார்த்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

     

    இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலையப் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
    Next Article ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
    Editor web1
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.