Author: Editor web1

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40- 50 கி.மீ வேகத்தில்) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இதர மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 31) கனமழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று…

Read More

வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைப் பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் 2023-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. சத்திய ஞானசபையின் புனிதத் தன்மையும் பெருவெளியின் அமைப்பும் பாதிக்கப்படும் எனக் கூறி, அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரூ. 100 கோடி மதிப்பிலான வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுவிட்டதாக அறநிலையத் துறை தெரிவித்தது. சர்வதேச மையத் திட்டத்தைக்…

Read More

CJP-யின் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் தோல்வியையே குறிப்பதாகவும், அதற்கு மத்திய உள்துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் திப்கே, மத்திய அரசு மற்றும் பாஜக மீது பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தங்கள் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், அது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள மிகப்பெரிய ஓட்டை என்றார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். புதிய கல்வி அமைச்சரை விமர்சித்த அபிஜித், பழைய அமைச்சருக்குப் பதிலாக புதியவர் நியமிக்கப்பட்டுள்ளது வெறும் நகல் மட்டுமே என்று தெரிவித்தார். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் மாணவர்களை மிரட்டுவது வெட்கக்கேடானது என்றார். நீட் வினாத்தாள் கசிவு…

Read More

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நஹாஸ் இதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், காயத்ரி லோஹர், ஆண்டனி வர்கீஸ், வினய் ஃபோர்ட், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பார்த்தி திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழும் ஒரு துணிச்சலான சூதாட்டக்காரன் எதிர்பாராதவிபரீதமான நிகழ்வுகளில் சிக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையைத் தக்கவைக்கப் போராடுவதே இப்படத்தின் மையக்கரு. ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு விறுவிறுப்பான அனுபவமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) தொண்டர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 36 நாள்கள் வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜூலை 25ம் தேதி அப்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. …

Read More

தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமினும், மற்றொருவருக்கு முன் ஜாமினும் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ரூ.35 கோடி தருவதாக சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் இதுவரை 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் ஜாமின் கோரியும், கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் முன்ஜாமின் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழுமையான ஆதாரங்கள்…

Read More

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்வீர் கபூர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா: பார்ட் 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4:15 மணிக்கு உலகம் முழுவதும் வெளியானது. 4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ராவணணாக நடித்துள்ள நடிகர் யாஷ் டிரைலரின் தொடக்கத்திலேயே, “மூன்று உலகங்களுக்கும் ஒரே ராஜா தான்” என்று முழங்கும் காட்சி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தர்மத்தையும் நன்மையையும் நிலைநாட்ட அவதரிக்கும் ஸ்ரீ ராமனாக ரன்வீர் கபூர் அமைதியான மற்றும் கம்பீரமான தோற்றத்தில் மிளிர்கிறார். சீதாதேவியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பினால் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து அமைத்துள்ள பின்னணி இசை மற்றும் பிரம்மாண்டமான VFX காட்சிகள் டிரைலருக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங்,…

Read More

தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வரும் 4ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஜூலை 31…

Read More

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் கேரளத்தை சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இறுதிப்போட்டியின் தொடக்கத்திலேயே ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார். 4-வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெய்ல் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். போட்டி நடத்திய ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கென்சி 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா தடகளப் பிரிவில் இந்திய வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளனர். ஆண்களுக்கான 100 மீட்டர் T47 இறுதிப் போட்டியில் இந்தியாவின் திலீப் மஹாது காவிட் தங்கப் பதக்கமும், முகமது பாசில் வெள்ளிப் பதக்கமும் வென்று முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயதான திலீப் காவிட், பந்தயத்தின் இறுதி 30 மீட்டரில் அதிவேகமாகச் சீறிப் பாய்ந்து 10.71 விநாடிகளில் இலக்கை அடைந்தார். இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் புதிய சாதனையாகவும் பதிவானது. கேரளாவைச் சேர்ந்த இளம் பாரா வீரர் முகமது பாசில், கடும் போட்டிக்கு இடையே 10.83 விநாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் 10.85 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் பெற்றார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில், பாரா தடகளத்தின் டிராக் பிரிவில்…

Read More