ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சட்டீஸ்கரைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ் (23) தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நைஜீரிய வீராங்கனை ஓனோமே ஒமோலோலா டிடிஹ் மொத்தம் 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், கனடாவின் ரபெகா க்ரூக்ஸ் 178 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இந்தப் போட்டியில் ஞானேஸ்வரி யாதவ் வென்ற பதக்கத்தின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. பளுதூக்குதல் பிரிவில் இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
இதுவரை இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 264 கிலோ எடையை தூக்கி ரிஷிகாந்த் சிங்–ம், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் ராஜா முத்துபாண்டியும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
