தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து வரிசையில் மூன்றாவதாகப் பாடப்பட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள சட்டம், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கூட மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் நிர்மல் குமார் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.
