Close Menu
    What's Hot

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!
    Featured

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 gangana
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், இன்றைய இளம் பெண்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து “Gen Z Protest Reels” என விமர்சித்திருந்த கங்கனா ரணாவத், தற்போது “மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் இளம் இந்து பெண்கள்” குறித்து நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில், “உண்மையாக சுயமாக வாழும் பெண்கள் தங்களது சுதந்திரத்தை தாங்களே சம்பாதிக்கிறார்கள். அவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார்கள், தங்களது செயல்களுக்கு முழுப் பொறுப்பும் ஏற்கிறார்கள். ஆனால் குடும்பத்தைச் சார்ந்தே வாழ்ந்துகொண்டு சுதந்திரம் பற்றி பெருமை பேசுவதால் மட்டும் ஒருவர் சுயாதீனமானவராக மாற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் சில இந்திய இளம் பெண்களை நான் ‘Generation Gutter’ என்று அழைக்கிறேன். அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை; குடும்பப் பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதில்லை. அதே நேரத்தில் மது, போதைப்பொருள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை ஆகியவற்றையே சுதந்திரம் என்று பெருமையாகக் கூறி, பெற்றோரின் வருமானத்தைச் சார்ந்தே வாழ்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அதோடு, “சுயமாக வாழ்வதற்கு முன் அதற்கான பொறுப்பையும் தகுதியையும் சம்பாதிக்க வேண்டும். பொறுப்பில்லாத சுதந்திரம் என்பது உண்மையான சுதந்திரம் அல்ல” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    கங்கனா ரணாவத்தின் இந்த சமீபத்திய பதிவு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

    Bollywood Controversy Hindu Women kangana ranaut social media
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!
    Next Article தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!
    Editor TN Talks

    Related Posts

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    July 29, 2026

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    July 29, 2026

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.