Close Menu
    What's Hot

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

    காமன்வெல்த் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்!

    காமன்வெல்த்: ஆண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் இந்தியா வரலாற்றுச் சாதனை! திலீப் காவிட் தங்கம், முகமது பாசில் வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்று மீண்டும் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!
    Featured

    இன்று மீண்டும் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

    Editor web1By Editor web1July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 36
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (ஜூலை 30) மீண்டும் கூடுகிறது.

    டெல்லி பிகாஜி காமா வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் நேரடியிலும், இணையவழியிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பில்லிகுண்டுலுவில் 3.442 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 28.337 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், இதனால் 24.896 டி.எம்.சி அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இருப்பினும், கர்நாடகப் பிரதிநிதிகள் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும் வறட்சி மற்றும் பெங்களூரு நகர குடிநீர்த் தேவைகளைக் சுட்டிக்காட்டியும் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி கூடி விவாதித்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு 4 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின.

    ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய விகிதாசார நீர்ப்பங்கு மற்றும் நிலுவையில் உள்ள தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரே மாதத்தில் இந்த ஆணையம் இரண்டாவது முறையாகக் கூடுவது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு
    Next Article அதிக மின்கட்டண புகார்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

    July 30, 2026

    காமன்வெல்த் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்!

    July 30, 2026

    காமன்வெல்த்: ஆண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் இந்தியா வரலாற்றுச் சாதனை! திலீப் காவிட் தங்கம், முகமது பாசில் வெள்ளி வென்று அசத்தல்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

    காமன்வெல்த் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்!

    காமன்வெல்த்: ஆண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் இந்தியா வரலாற்றுச் சாதனை! திலீப் காவிட் தங்கம், முகமது பாசில் வெள்ளி வென்று அசத்தல்!

    அதிக மின்கட்டண புகார்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு!

    இன்று மீண்டும் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.