Close Menu
    What's Hot

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் கொண்டு செல்ல 3 மாத காலத் தடை!
    Featured

    தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் கொண்டு செல்ல 3 மாத காலத் தடை!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தத் தடைக்கான முக்கியக் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன:

    தமிழகத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், ஜல்லி, எம்-சாண்ட் (M-Sand), பாறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்திற்குள் பெருமளவில் அதிகரித்துள்ளது. பெருமளவிலான கட்டுமானப் பொருட்கள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் லாரிகளால் உள்ளூர் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

    மேலும், இத்தகைய வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கற்களை வெட்டி எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட சூழலியல் மண்டலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களும் இந்தத் தடையின் கீழ் வரும்.

    இந்தத் தடை உத்தரவு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்குக் கொண்டு செல்லும் கட்டுமானப் பொருட்களுக்குப் பொருந்தாது. இந்தத் தற்காலிகத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் 3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தடையை மீறிச் செயல்படுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!
    Next Article டெல்லியில் தேஜகூ எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    July 28, 2026

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    July 28, 2026

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.