Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முக்கிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: தமிழக அரசு புதிய அரசாணை!
    Featured

    முக்கிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: தமிழக அரசு புதிய அரசாணை!

    Editor web1By Editor web1August 5, 2026Updated:August 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் முக்கியப் பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களுக்கு இனி முதலமைச்சரின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாய்குமார் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணி அதிகாரிகள் (IAS, IPS), கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO), காவல் கண்காணிப்பாளர்கள் (SP), கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் இனி கட்டாயமாக முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

    தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)-ன் கீழ் கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும் மற்றும் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7 ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசுத்துறையில் இருந்து மற்றொரு துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரின் ஒப்புதல் பெற்றால் போதும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அத்தகைய கோப்புகள் முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

    தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை இனி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று தாக்கலாகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட்! நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்!
    Next Article மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    August 5, 2026

    மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

    August 5, 2026

    இன்று தாக்கலாகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட்! நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.