Author: Editor web2
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன் அறிவிப்பின்றி நடைபெற்ற இந்த ஆய்வில், மாணவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். விடுதியில் உணவுப்படி வெறும் ரூ.50 மட்டுமே வழங்கப்படுவது, உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், ஊக்கத்தொகை பல மாணவர்களுக்கு கிடைக்கவில்லை, தங்கும் வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் விடுதிக்குச் சென்று மாணவர்களின் தங்கும் அறைகள், சமையலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில்…
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா, பாஜக மற்றும் தவெக இடையேயான அரசியல் இணைப்புக்கான பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, “பாஜக – தவெக இணைப்பு வேலையை வைகோ செவ்வனே செய்து வருகிறார். இன்று திமுகவுக்கு என்ன நடக்கிறதோ, அதே நிலை நாளை தவெகவுக்கும் வரும். தான் கூறுவதை தவெக ஏற்கவில்லை என்றால், வைகோ அவர்களையே விமர்சிப்பார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “32 ஆண்டுகள் வைகோவின் தலைமையில் பணியாற்றினேன். ஆனால் கடைசி நான்கு ஆண்டுகளில் அவரது மகனுக்காக என்னை முற்றிலும் புறக்கணித்தார். என்னை கட்சியில் இருந்து நீக்க பல்வேறு நாடகங்கள் நடத்தப்பட்டன. துரை வைகோ, என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்சியை விட்டு விலகுவேன் என அறிக்கை வெளியிட்டார். என்னை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் பின்னணியில் வைகோவும், அவரது மகனும் இருந்தனர். ஆனால் அதனால் எனக்கு எந்த…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “காமராஜர் போன்ற ஒரு தலைவர் மீண்டும் பிறக்க மாட்டாரா என்று நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் மக்களும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். இன்றைய அரசியலில் தலைமைத்துவம் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “குறிப்போடு பேசுபவன் தலைவன் அல்ல; குறிக்கோளோடு பேசுபவனே தலைவர்” எனத் தெரிவித்தார். காமராஜரின் எளிமையான வாழ்க்கையைப் புகழ்ந்த சீமான், “தனக்கென்று குடும்பம் கூட அமைக்காமல் மக்களுக்காக வாழ்ந்தவர் காமராஜர். ஆனால் இன்றைய தலைவர்கள் குடும்பத்திற்காகவே வாழ்கிறார்கள்” என்றார். மேலும், காமராஜர் பல அணைகள் கட்டியிருந்தாலும் அவரது பெயர் எங்கும் இல்லை; ஆனால் இன்று சிறிய பணிகளுக்குக் கூட பெயர்ப் பலகைகள் வைக்கப்படுகின்றன என்று விமர்சித்தார். முதல்வராக இருந்தபோதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணித்தவர்…
கடந்த 1993-ஆம் ஆண்டு திமுகவில் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2006-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், 2017-ல் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததும் தனது அரசியல் வாழ்க்கையின் “இரண்டு பெருந்தவறுகள்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், 1993 ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், தூத்துக்குடி பொதுக்கூட்டங்களில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார். நாகர்கோவில் பொதுக்கூட்டத்திற்கு முன்பு, தனது புகைப்படத்துடன் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக கூறினார். இருப்பினும், இதனால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வருத்தமடைந்ததாகவும், பின்னர் கட்சித் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில், “என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர்தான் இருப்பார்” என்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்திப் பேசியதாகவும், அதன்பிறகும் கருணாநிதியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் வைகோ…
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவது நல்லது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வாய்மொழி அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையின்போது, மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, “மூன்றாவது மொழி என்றால் அது இந்தி மட்டுமல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஆனால் 9-ஆம் வகுப்பில் புதிய மொழியை கட்டாயமாக அறிமுகப்படுத்துவது சரியல்ல. அந்த வகுப்பில் மாணவர்கள் ஏற்கனவே பொதுத்தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். புதிய மொழியை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே கற்பிக்க வேண்டும்” என்று கருத்து…
பாமகவின் வாக்கு வங்கி கடுமையாக சரிந்துள்ளதாகவும், இனி அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்க முடியாது என்றும் பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலத்தில் அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அருள், 1989-ஆம் ஆண்டு முதல் 2025 வரை கட்சியின் வளர்ச்சிக்காக முழுமையாக உழைத்ததாகவும், 18 முறை சிறை சென்றதுடன், குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 21 சதவீத இடஒதுக்கீட்டு போராட்ட தியாகி குப்புசாமி குடும்பத்துக்கு தனது சொந்த செலவில் ரூ.18 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுத்து, அதை அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்ததையும் நினைவுகூர்ந்தார். அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, தாம் அன்புமணியின் பக்கமே உறுதியாக நின்றதாகக் கூறிய அவர், தற்போது தன்னை “துரோகி”, “சாக்கடை” என விமர்சிப்பதாக வேதனை தெரிவித்தார். “அன்று இருந்த அன்புமணி…
தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்களுக்கும் வியப்பான நிகழ்வுகளுக்கும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில், மத்திய அரசு விழா ஒன்றில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்றதுதான் தமிழக அரசியலில் பரபரப்பான விவாதத்தையும் பரவலான ஊகங்களையும் கிளப்பியுள்ளது. விழா பின்னணியும் மேயர் பிரியாவின் பங்கேற்பும் சென்னை கொளத்தூர் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட் மையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று முறைப்படி திறந்து வைத்தார். எளிய மக்களுக்கும் அரசுச் சேவைகள் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், தபால் நிலையங்கள் தற்போது வங்கி, காப்பீடு, ஆதார் உள்ளிட்ட பல்வேறு குடிமக்கள் மையச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த பொதுச் சேவை மையங்களாக மாறியுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் இந்த விழாவில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,…
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 போன்ற ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை மத்திய தணிக்கை வாரியத்தின் (CBFC) நேரடி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சட்லஜ்’ (Satluj) என்ற திரைப்படம் சமீபத்தில் ஏற்படுத்திய சர்ச்சையே மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. தணிக்கை வாரியம் விதித்த 127 வெட்டுகளுக்கு அஞ்சி, திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் மத்திய அரசு தலையிட்டு, வெளியான 48 மணி நேரத்திற்குள் இப்படத்தை ஓடிடி…
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றம்சாட்டைத் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆட்சியில் இரவு 9 மணி, 10 மணி வரை பத்திரப்பதிவு பணிகள் நடைபெற்றதாகவும், ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தியைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து பதிவு செய்யப்பட்டாலும் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், புறம்போக்கு நிலங்கள், ஏரி நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களின் சட்டவிரோத பதிவுகளைத் தடுக்க அதிகாரிகளுக்கு தொடர்ந்து உத்தரவுகள் வழங்கப்பட்டு…
திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாத நிலைக்கு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு மாதங்களாக திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தாங்கள் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாத நிலைக்கு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம் என்றும் கூறினார். மேலும், கடந்த 45 முதல் 50 நாட்களாக தவெக எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சே சில அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும், தற்போது மு.க.…