Author: Editor web2

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்காக எ.வ.வேலுவுக்கு கடந்த 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஆஜராக வேண்டிய நாளில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் வழக்கறிஞர்கள் மூலம் விளக்க மனு தாக்கல் செய்து கால அவகாசம் கோரியிருந்தார். இதனையடுத்து, வேலுவுக்கு எதிராக…

Read More

விராலிமலை சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரிட்ஜ் வாங்க கூப்பன்கள் வழங்கி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், தவெக வேட்பாளர் முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த கே.கே.செல்லப்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சி.விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கியதுடன், பிரிட்ஜ் வாங்குவதற்கான கூப்பன்களையும் வழங்கி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனுவை விசாரணைக்கு…

Read More

சென்னையில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  சேகர்பாபு, காமராஜரின் புகழை உயர்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக ஆட்சியே மேற்கொண்டதாக தெரிவித்தார். காமராஜரின் வழியில் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திமுக தலைவர் செயல்படுத்தியதாக கூறிய அவர், காமராஜரின் புகழை பறைசாற்றும் பணிகளை திமுக அரசு தொடர்ந்து செய்ததாக குறிப்பிட்டார். சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்ட ரூ.800 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் தற்போதைய தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அந்தத் திட்டங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் கோரி, விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்றும் கூறினார். நிதி நெருக்கடி…

Read More

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. “அறப்போர் இயக்கம்” ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதுடன், ரூ.40 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்காக எ.வ.வேலுவுக்கு கடந்த 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி…

Read More

நாடு முழுவதும்2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் இடங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 441 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 63,296 எம்பிபிஎஸ் இடங்களும், 382 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 73,643 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன. மொத்தமாக 823 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,36,939 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த கல்வியாண்டில் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 5,199 இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 150 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 5,349 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல், 41 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 7,850 இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 800 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 8,650 இடங்களாக உயர்ந்துள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 78 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 13,049-இல் இருந்து…

Read More

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தைப் பாராட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ப அதிர்ச்சியளித்த இந்த அழைப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டுப் பேசிய ரஜினிகாந்த், “செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போதெல்லாம் வருவதே இல்லை. விஷ்ணு, நீங்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளீர்கள். ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் அருமை. குட்டி பாப்பா ஜாராவை எப்படிப் பிடித்தீர்கள்? அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஷ்ணு, உங்களுக்கு மிகச் சிறந்த திரைக்கதை அறிவு (Script Sense) இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டு மழையால் நெகிழ்ந்துபோன விஷ்ணு விஷால், “ஒரே…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் புதிய தகவல் தீயாய்ப் பரவி வருகிறது. சமீபத்தில், மலேசியாவின் பிரபல தொழிலதிபரும், முன்னணித் திரைப்பட விநியோகஸ்தருமான டத்தோ அப்துல் மாலிக் (Malik Streams Corporation), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு, சர்வதேச அளவில் அப்படத்திற்கு மாபெரும் விளம்பரத்தைத் தேடித்தந்தது. அதே ‘ஜனநாயகன்’ மாடலைப் பின்பற்றி, சர்வதேச சந்தையைக் குறிவைத்து ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவையும் மலேசியாவில்…

Read More

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, மாலை நேர நெரிசல் மிகுந்த நேரத்தில் மின்சார ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரை ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கும் இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படாததால் செய்வதறியாது தவித்தனர். ரயில் நிலையங்களில் முறையான அறிவிப்புகள் தாமதமாக வெளியிடப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில், “சிக்னல் கோளாறு காரணமாகக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படாது; அதற்குப் பதிலாகப் பயணிகள் பூங்கா நகர்  ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்…

Read More

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய பேட்டரிகளில் இருந்து காரீயத்தை (Lead) பிரித்தெடுக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், அவரது உடலை அரசு செலவில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்த 3 பேருக்கு…

Read More

சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றித் தவறான முறையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது மடிக்கணினியிலிருந்து 1,900 ஆபாசப் புகைப்படங்களும், 400 வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் காசிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்துக் காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

Read More