Author: Editor web2
சாகித்திய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி (79) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக மற்றும் தமிழ் இலக்கிய உலகப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கிய உலகில் ஆழமான…
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) உள்கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த புதிய முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் Amazon Web Services (AWS) தரவு மையங்கள் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு AI சிப்கள், கிளவுட் சேவைகள், AI கருவிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். மேலும், இந்தியாவில் தனது இ-காமர்ஸ் மற்றும் க்விக் காமர்ஸ் சேவைகளையும் அமேசான் விரிவுபடுத்த உள்ளது. இந்த ஆண்டிலேயே 20-க்கும் மேற்பட்ட புதிய Fulfilment Centres மற்றும் 100-க்கும் மேற்பட்ட Last-mile Delivery Stations அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக டயர்-3 மற்றும் டயர்-4 நகரங்களுக்கு…
பிளாஸ்டிக் பால் பாக்கெட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், சோதனை அடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு மாற்றாக பால் விநியோகிக்கும் நடைமுறையை கண்டறிய ஆவினுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சோதனை முயற்சியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து தலா ரூ.3.60 லட்சம் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாகவும், அவற்றை நிறுவ தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அவற்றைச் சுற்றியுள்ள வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு…
கரூர் மாவட்ட கோயில் நிலங்களின் பத்திரப் பதிவு தடையை நீக்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன உள்ளிட்ட முழு விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களின் பதிவுத் துறை தடையை, மாவட்ட ஆட்சியர் நீக்கியதை எதிர்த்து சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில், மனுதாரர் தரப்பில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தடையை நீக்கியதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலங்களில் வசித்து வந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், ரயத்துவாரி பட்டா உள்ளிட்ட ஆவணங்களை…
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வாதிட்டார். சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான முழு கட்டணம் மற்றும் செலவுத் தொகை வழங்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, உரிய கட்டணத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி…
காலங்கள் மாறினாலும், தசாப்தங்கள் கடந்தாலும் உண்மையான நட்பும் நேர்மையும் என்றும் மங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. 1991-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அப்கைக் நகரில் பணியாற்றியபோது, தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த எட்லா லச்சண்ணா என்பவருடன் இஸ்மாயிலுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் மேலும் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களுடன் ஒரே வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தனர். அந்த காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருந்த இஸ்மாயிலுக்கு, லச்சண்ணா 120 சவுதி ரியால் (அப்போது சுமார் ரூ.1,000) கடனாக வழங்கியிருந்தார். பொருளாதார நிலை சீரானதும் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக இஸ்மாயில் வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் இருவரும் இந்தியா திரும்பிய நிலையில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், கொடுத்த வாக்குறுதியை மறக்காத இஸ்மாயில், இணையத்தில் தேடி தெலங்கானாவின் தர்மபுரி நகருக்குச் சென்று, உள்ளூர் மக்களின் உதவியுடன் லச்சண்ணாவின்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து, மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவிகளின் கைகளில் காயம் ஏற்படும் வகையில் காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கல்விக்கூடங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு கூறிய நிலையில், கோடாலி கிராமத்தில் அந்த மதுக்கடை எவ்வாறு செயல்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்ட பிறகும் மதுக்கடையை மூடாமல், அவர்கள்மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மையான செயல். இதுதானா மக்கள் எதிர்பார்த்த மாற்றம்?” என்றும் விமர்சித்துள்ளார். “கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதாகக்…
ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு இந்தியா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் கலந்து கொண்டார். ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம், சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீபிரியா ரங்கநாதன், “பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நீண்டகால நட்புறவை பேணி வருகிறது. இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது” என்று தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம்,…
முதலமைச்சர் விஜய் “இரவல் ஆட்சி நடத்துகிறார்” என்றும், “இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு தவெக ஐ.டி. பிரிவு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. தவெக ஐ.டி. பிரிவு, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர், ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது” என்று விமர்சித்துள்ளது. மேலும், “திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கிறது” என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், “கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம், தவெக அரசு குறித்து குறைகூறுவது குபீர் சிரிப்பை ஏற்படுத்தும் காமெடி” என்றும் தவெக ஐ.டி. பிரிவு தாக்கியுள்ளது. இறுதியாக, “அதிமுகவே துண்டு துண்டாக சிதறி வரும் நிலையை…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நடைபெறும் “இரவல் ஆட்சி” இது என்றும், விஜய் இன்னும் முதலமைச்சருக்கான அரசியல் அந்தஸ்தைப் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, தவெக அரசின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “திமுகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் தவெகவுக்கு சென்றவர்களுக்கு, இறுதியில் முதல்வர் விஜய் அல்வா கொடுத்துவிட்டார்” என்று அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தவெக அரசு இரண்டு கால் கொண்ட நாற்காலியைப் போல தடுமாறிக் கொண்டிருக்கிறது. பிற கட்சிகளில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கித்தான் விஜய் ஆட்சி நடத்துகிறார். அதனால் அவர் இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” என்றார். முதலமைச்சர் விஜய்…