Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசுப் பேருந்தை இயக்காமல் போலி டிக்கெட் மோசடி: உயர்நீதிமன்றம் அதிரடி  உத்தரவு!
    தமிழ்நாடு

    அரசுப் பேருந்தை இயக்காமல் போலி டிக்கெட் மோசடி: உயர்நீதிமன்றம் அதிரடி  உத்தரவு!

    Editor web2By Editor web2June 5, 2026Updated:June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madurai High court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை நேரில் இயக்காமலேயே, ஆவணங்களில் மட்டும் பேருந்துகள் இயங்கியதாகக் காட்டி, போலி பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட பெரும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2022-ஆம் ஆண்டு வேடசந்தூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், 3 வெவ்வேறு விதமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டதும், ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டது போன்ற போலி பதிவுகள் உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பி.கார்த்திக் ராஜா மற்றும் இளநிலை உதவியாளர் பி.சிவராஜ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி தனது உத்தரவில், இந்த விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

    ”ஒரே வழித்தடத்தில் போலி பதிவுகள் உருவாக்கப்பட்டு, டீசல் தொகை மற்றும் ஊழியர்களின் சம்பளத் தொகையிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றத்திற்குப் பின்னரும், சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கு மிகச் சிறிய தண்டனை வழங்கி ஒட்டுமொத்த விவகாரத்தையும் மூடி மறைத்துள்ளனர்.

    இத்தகைய முறைகேடுகள் உயர் அதிகாரிகளின் கூட்டுச் சதி மற்றும் ஈடுபாடு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மோசடி தமிழ்நாட்டின் பிற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

    தமிழகத்தில் உள்ள 14 லட்சம் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, வெறும் 100 ஊழியர்களுடன் பெயரளவில் மட்டும் செயல்படுவது வருந்தத்தக்கது. ஊழல் தடுப்புத் துறைக்கு வரும் புகார்களை, மீண்டும் சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்களுக்கே அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த போலி டிக்கெட் மோசடி மற்ற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா? இதில் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கு (MD) தொடர்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையில் முறைகேடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி : தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!
    Next Article பிரெஞ்சு ஓபன் : சாரா எர்ரானி- ஆன்ட்ரியா வவசோரி இணை சாம்பியன்..!
    Editor web2
    • Website

    Related Posts

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.