Author: Editor web2

பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை…

Read More

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கைப் பொருட்கள் கடந்த 4 ஆண்டுகளில் 1.27 கோடிக்கும் அதிகமானவை திருடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 69 ரயில்வே பிரிவுகளில் 54 பிரிவுகள் அளித்த தகவல்களின்படி, பெட்ஷீட், டவல், போர்வை, தலையணை, தலையணை உறை உள்ளிட்ட 1.27 கோடி பொருட்கள் காணாமல் போயுள்ளன. 2022-ஐ ஒப்பிடும்போது 2025-ல் இந்தத் திருட்டு 56% அதிகரித்துள்ளது. திருடப்பட்ட பொருட்களில் முகம் துடைக்கும் டவல்கள் 46.54 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளன. தொடர்ந்து பெட்ஷீட்கள் 41.13 லட்சம், தலையணை உறைகள் 23.59 லட்சம், போர்வைகள் 12.95 லட்சம், தலையணைகள் 2.76 லட்சம் திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டால் படுக்கைப் பொருட்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சுமார் ₹104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பின் பெரும்பகுதி, தினக்கூலியாக பணிபுரியும் ஏசி…

Read More

தவெகவில் இணைந்தது எந்தவித நிர்பந்தத்தாலும் அல்ல, தனது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தவெக தரப்பில் தன்னை அணுகியதாகவும்,  கூறி இருக்கிறார். குதிரைபேர ஊழலுக்கு இதுவே தகுந்த ஆதாரங்கள் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று ஆளுநரைச் சந்தித்து,  இது தொடர்பாக புகார் அளித்தார். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,  கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தவெகவில் சேருமாறு அக்கட்சியிலிருந்தோ, ஏற்கனவே அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் அல்லது முன்னாள் எம்எல்ஏக்களிடமிருந்தோ யாரும் என்னை அழைக்கவில்லை” என்றார். அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்ததாகவும், அதனால்தான் ஒன்றிய, நகர மற்றும் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட…

Read More

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சூர்ய பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தமிழகத்தில் எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை கொல்ல மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. எனவே, மே 28 பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளோ, மறு நாளோ மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பசுவோ அல்லது கன்றோ கொல்லப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளரும் காவல் துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்’ என்று மே 27-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜூலை 1-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு…

Read More

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானில் 140-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை மூடல் உலக கடல்வழி கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதற்றத்தின்…

Read More

கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த மிகப்பெரிய முதலீட்டு வெளியேற்றத்திற்குப் பிறகு, இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த  ஜூன் மாதத்தில் ₹49,340 கோடி, மே மாதத்தில் ₹32,963 கோடி, ஏப்ரலில் ₹60,847 கோடி, மார்சில் ₹1.17 லட்சம் கோடி வரை முதலீடு வெளியேறியிருந்தது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் இதுவரை ₹15,157 கோடி அந்நிய முதலீடு இந்திய பங்குச் சந்தைக்குள் வந்துள்ளது. காரணம் என்ன? உலகளவில் AI (செயற்கை நுண்ணறிவு) சார்ந்த பங்குகளில் அதிக முதலீடு செய்திருந்த நிதிகள், தற்போது மதிப்பீடு கவர்ச்சியாக உள்ள இந்திய சந்தையை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளன. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், இந்திய பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு தற்போது குறைவாக இருப்பதால், வரும் மாதங்களில் மேலும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக லார்ஜ்கேப் (Large Cap) பங்குகள் மற்றும் வங்கிப் பங்குகள் அதிக முதலீட்டை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.…

Read More

இந்தியப் பொதுவாழ்வில் ஊழல் என்பது அரசியல் களத்தைத் தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக இருந்த காலம் மெல்ல மறைந்து, அது சமூகத்தால் பழகிப்போன, ஒரு ‘இயல்பான’ விஷயமாக மாறிவிட்டதா என்ற தார்மீகக் கேள்வி தற்போதைய சூழலில் வலுவாக எழுந்துள்ளது. தேர்வுத்தாள் கசிவுகள், மெகா உள்கட்டமைப்பு முறைகேடுகள் எனத் தேசிய அளவில் புயலைக் கிளப்பும் ஊழல் புகார்களுக்கு மத்தியிலும், அவை தேர்தல் களங்களில் பெரியதொரு மக்கள் அலையையோ அல்லது ஆட்சி மாற்றத்தையோ உருவாக்குவதில்லை என்ற எதார்த்தம் அதிர்ச்சியளிக்கிறது. ஊழலுக்கு எதிரான ‘தார்மீகத் தூய்மை’ என்ற ஒற்றைப் பிம்பத்தை மூலதனமாக வைத்தே புதிய அரசியல் சக்திகள் உருவாகின்றன; ஆனால், அதே சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அல்லது கைப்பற்ற முயலும்போதும் அதே பழைய அரசியல் சமரசங்களுக்குள் சுருங்கிவிடுகின்றன என்பதுதான் சமகால இந்திய மற்றும் தமிழக அரசியலின் கசப்பான எதார்த்தமாக உள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள் அரசியல் திறனாய்வார்கள்.  ‘பா.ஜ.க வாஷிங் மெஷின்’ தேசிய அளவில் பா.ஜ.க மற்றும்…

Read More

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளின் அரங்குகளை பார்வையிட்டார். மா விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி, இந்த ஆண்டு 32வது முறையாக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. கண்காட்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் விளைந்த பல்வேறு ரக மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, மகளிர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் 30 அரங்குகளும், தனியார் நிறுவனங்களின் 50 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். காவேரிப்பட்டினத்திலிருந்து வந்த பார்வையாளர் ஜெயந்தி, மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை, தேவதைகள் உள்ளிட்ட…

Read More

டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தற்போது காலி பாட்டில்களுக்கு தனியாக வசூலிக்கப்படும் ரூ.10-ஐ, இனி மதுபானத்தின் அதிகபட்ச விற்பனை விலையிலேயே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி விதிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அடுத்த…

Read More

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக செல்போனில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் பாடல் அல்லது வீடியோ ஒலிக்கச் செய்வது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கையில், “ மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வளாகங்​களில் செல்​போன் ஒலிபெருக்​கியைப் பயன்​படுத்​து​வது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்​திக் கொள்​ளாமல் இசை, வீடியோக்​கள் பார்ப்​பது, செல்​போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்​கள் மூலம் அதிக இரைச்​சலை ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போன்​களைப் பயன்​படுத்​து​வதும், மற்​றவர்​களுக்கு இடையூறு விளை​விப்​பதும் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகக் கருதப்​படும். மத்​திய வீட்​டு​வச​தி, நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளி​யிட்ட அரசிதழ் அறி​விப்​பின்​படி, ‘ஜன் விஸ்​வாஸ் சட்​டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. அதன்​படி, மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் மற்ற பயணி​களுக்கு…

Read More