Author: Editor web2

தவெக அரசும் அதன் தலைமையும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்”  என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. ராஜ்மோகன் அவர்களே! நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது. வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து,…

Read More

ஆன்லைன் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு பணம் கேட்டு, மறுத்த குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படும் ஓலா ஆட்டோ ஓட்டுநரை, கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் தைரியமாகத் தட்டிக்கேட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து பூசாரிபாளையம் செல்ல குடும்பத்தினர் ஓலா செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தனர். முதலில் சவாரியை ஏற்றுக்கொண்ட ஓட்டுநர் பின்னர் அதை ரத்து செய்ததாகவும், அதன்பின் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் வந்து தங்களை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சிறிது தூரம் சென்ற பிறகு, ஆப்பில் காட்டியிருந்த ரூ.150 கட்டணத்திற்கு பதிலாக ரூ.300 வழங்க வேண்டும் என்று ஓட்டுநர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணின் கணவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக்…

Read More

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026 – 2029-ஆம் ஆண்டிற்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ‘நம்ம கே.பாக்யராஜ் அணி’ சார்பில் பிரபல இயக்குநர் சேரன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அணியின் வேட்பாளர்கள் விவரங்களையும், சங்கத்திற்கான நோக்கங்களையும் பகிர்ந்துள்ளார். அவரது அணியில் முக்கியப் பொறுப்புகளுக்குத் திரைத்துறையின் முன்னணி ஆளுமைகள் களம் இறங்கியுள்ளனர். செயலாளர் பதவிக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத் தலைவர்கள் பதவிக்கு இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு செல்வ பாரதி, பாஸ்கர் சக்தி, கே.பி.ஜெகன், கே.பி.பி. நவீன் ஆகியோருடன் 12 செயற்குழு உறுப்பினர்களும் இந்த அணியில் களம் காண்கின்றனர். இயக்குநர் கே.பாக்யராஜால் விரும்பித் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இவ்வணியில் அதிகம் இருப்பதால், இது “நம்ம கே.பாக்யராஜ் அணி” என்று அழைக்கப்படுவதாக சேரன் குறிப்பிட்டுள்ளார்.…

Read More

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக சரிந்துள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள தரவு மையம் வெளியிடும் ஜூன் மாத அறிக்கையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அரியலூரில் சராசரியாக 28.74 மீட்டர் ஆழத்தில் நிலத்தடி நீர் உள்ளது. அதைத் தொடர்ந்து கோவை (20.89 மீ.), கடலூர் (19.03 மீ.), நாமக்கல் (17.39 மீ.), புதுக்கோட்டை (16.60 மீ.), ஈரோடு (15.52 மீ.), கரூர் (13.52 மீ.), தஞ்சாவூர் (12.61 மீ.), திண்டுக்கல் (12.13 மீ.) ஆகிய மாவட்டங்களில் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 6.77 மீட்டர், தர்மபுரியில் 5.55 மீட்டர்,…

Read More

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றின் முக்கிய மூலப்பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனால், டிஸ்ப்ளே திரைகள், லித்தியம்-அயன் பேட்டரி செல்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப பாகங்களுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி செலவு குறையும். எனவே, உற்பத்திச் செலவும் குறைந்து, இந்திய மின்னணு உற்பத்தித் துறை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிவிலக்கு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு 2029 மார்ச் 31 வரை செல்லுபடியாகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு இது கூடுதல் வலுசேர்க்கும் என்றும், இறக்குமதிச் சார்பைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் அரசு நம்புகிறது. இந்த நடவடிக்கை சுங்க வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, லித்தியம்-அயன் பேட்டரி, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தித்…

Read More

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்தார். ”ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்” எனக் கிண்டலடித்து இருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, ”கரூர் துயரச் சம்பவத்தின் போது மக்களைக் காப்பாற்றியது யார்?  பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது  கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” எனக் கூறி இருந்தார். இந்த நிலையில், இதற்கு தவெக ஐடி விங் கொடுத்துள்ள பதிலடியில், “கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே…

Read More

நாமக்கல்லில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினசரி சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயித்து வருகிறது. மேற்காசிய போர் காரணமாக கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததுடன், வெளிநாட்டு ஏற்றுமதியும் உயர்ந்ததால் கடந்த சில வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. இந்த நிலையில், ஏற்கனவே ரூ.6.50 ஆக இருந்த பண்ணை கொள்முதல் விலை, மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டைக்கு ரூ.6.55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல்…

Read More

ஈரான் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி ஈரானிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று  குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினை மற்றும் அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா–ஈரான் உறவு மீண்டும் பதற்றமடைந்துள்ளது. சமீபத்திய தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலடியாக பஹ்ரைன், கத்தார், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தை தொடரும் சூழல் உருவாகியிருந்தாலும், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக…

Read More

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணி என்ற முதல்வர் விஜய்யின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கேட்காத விஷயத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று  பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாகவும் விமர்சித்தார். மேலும், “இத்தகைய செயல்களில் முதலமைச்சரே ஈடுபடும்போது, இந்த ஆட்சி எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது” என்றார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய கனிமொழி, அது விசாரணையில் உள்ள விவகாரம் என்பதால் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அதேவேளையில், “கரூர் சம்பவத்தின் போது மக்களோடு நின்றவர்கள் யார்,…

Read More

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல். ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோன்று முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால், மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான பதவியை ராஜினாமா செய்தார்.  இந்த நிலையில்,  இத்தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த வேட்பாளர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வழக்குகள் தொடரப்பட்டு அவை தற்போதும் நிலுவையில் உள்ளன. இதனைச் சுட்டிக்காட்டியே நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.  பொதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், முந்தைய பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்த்த சட்டப்பூர்வ வழக்குகள் நீதிமன்ற…

Read More