Author: Editor web2
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, அறிவுத்திறன் மிக்க கலை ஆளுமைகளில் ஒருவரான தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா. செழியன் (57), இன்று (ஜூலை 10) காலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். பி.சி.ஸ்ரீராமின் பாசறையில்… சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த செழியன், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பொறியியல் படித்திருந்தாலும், இளம் வயதிலிருந்தே அவருக்குள் நிழற்படக் கலையின் மீது அலாதியான ஆர்வம் இருந்தது. ஒளியையும் நிழலையும் கொண்டு காட்சிகளைப் பதிவு செய்யும் அந்த மாயாஜாலம் அவரை ஈர்த்ததால், தனது பொறியியல் பட்டத்தை விடுத்து சினிமா உலகிற்குள் நுழையத் தீர்மானித்தார். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமாப் பயணத்தை செழியன் தொடங்கினார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பள்ளியில் கற்றுக் கொண்ட நுட்பங்கள் இவருக்குள் இருக்கும் திறமையை மேலும் கூர்மையாக்கின. கடந்த 2007-ல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக…
எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் மோகனாவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்ததாக எழுந்த சர்ச்சையில், பயணி மற்றும் டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் மோகனா மீதும், மோகனா அளித்த புகாரின் அடிப்படையில் டிக்கெட் பரிசோதகர் மீதும் எழும்பூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மோகனா தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பேருந்து நிலையம் செல்ல காத்திருந்தபோது, டிக்கெட் பரிசோதகர் தன்னை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக குற்றம்சாட்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று செல்போனை பறித்து தாக்கியதாகவும், தற்காப்புக்காக மட்டுமே செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு…
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் வந்தனர். சபாநாயகர் இல்லாததால், அவர்கள் சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு தலைமைச் செயலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அறையை சீரமைக்க ஏற்கனவே மனு அளித்திருந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டபோது, எம்.எல்.ஏ.க்களின் இருக்கை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், எடப்பாடி பழனிசாமியின் அறை சீரமைப்புப் பணிகள் நாளை தொடங்கும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறினார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை சில முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக பதிலளித்தார். ஆளுநர் மாளிகையில் குதிரைப் பேரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து கேட்கப்பட்டபோது, “புகார் அளிப்பது…
காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவிலான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க முடியாது என்ற கர்நாடக அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத்தர தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சி. காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது. குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர்…
தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என்ற கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சரின் கருத்து, உச்சநீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதள பதிவில்,”கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழகத்திற்குத் தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல! உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதித் தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம்: “மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர்… ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது.” (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: பக்கம் 460) மறுக்க முடியாத உண்மைகளும் தரவுகளும்: தற்போதைய இலக்கு: காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சி மற்றும் ஜூலை…
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத்தில் புதிய தொழில்நுட்பங்கள், சர்வதேச தரத்திலான செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்வாரியத்தின் மூத்த பொறியாளர்களும், ஐஐடி நிபுணர்களும் இணைந்து மின் உற்பத்தி, மின் விநியோகம், சைபர் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவார்கள் என்றார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.…
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பணிகளில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இந்த திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யவும், தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவும் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வண்ந்போது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் திருத்தங்களின்படி அரசின் முன் அனுமதி இன்றி வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும், அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும்…
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையின் சுகாதார வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் தூய்மை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவமனை முழுவதும் எப்போதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சமீபத்தில் எழுந்த புகார்களைப் போன்ற குற்றச்சாட்டுகள் இனி வராத வகையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்களுடன் உரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளையும், அவர்களுடன் இருந்த தாய்மார்களையும் சந்தித்த முதலமைச்சர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சை, அவசர சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கான…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சனின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளர் மருது கணேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கே. குமரேஷ்பாபு விசாரித்தார். இதே வழக்குடன், திருவெறும்பூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. நவல்பாட்டு விஜய் (எஸ். விஜயகுமார்), திண்டுக்கல் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், திருவள்ளூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. அருண்குமார், மொடக்குறிச்சி தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. சண்முகம் மற்றும் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.சி. கோவிந்தராஜன் ஆகியோரின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். இதனிடையே, கோபிசெட்டிபாளையம், மைலம், ஜோலார்பேட்டை, திருமயம் மற்றும்…
இந்திய ரயில்வேயின் ஏசி கேபின் ஒன்றை ஹனிமூன் அறையைப் போல பிரம்மாண்டமாக அலங்கரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், கேபின் முழுவதும் வண்ணமயமான பலூன்கள், மலர் அலங்காரங்கள், ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் மற்றும் பெரிய அளவில் “I ❤️ You” என்ற வாசகம் அமைக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. இதனால், பலரும் இதை “இந்திய ரயில்வேயின் முதல் ஹனிமூன் சூட்” என சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்த அலங்காரம் காதல் ஜோடிகளுக்காக செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடாகத் தெரிகிறது. சிலர், பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பொதுப் போக்குவரத்து வசதியான ரயில் பெட்டிகளில் இதுபோன்ற தனிப்பட்ட அலங்காரங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர். பாதுகாப்பு, தூய்மை மற்றும் பிற பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று…