Close Menu
    What's Hot

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை
    Featured

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    Editor web2By Editor web2July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EV Velu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    தமிழக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பணிகளில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

    இந்த திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கை ரத்து செய்யவும், தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவும் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இன்று வழக்கு விசாரணைக்கு வண்ந்போது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் திருத்தங்களின்படி அரசின் முன் அனுமதி இன்றி வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும், அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் வாதிட்டனர். மேலும், மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில் தேவையின்றி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் சுமார் ரூ.195 கோடி வரை ஒப்பந்ததாரருக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27-க்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

    மேலும், ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.

    DVAC EVVelu MadrasHighCourt TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!
    Next Article மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக சாத்தியமில்லை: அமைச்சர் நிர்மல் குமார்
    Editor web2
    • Website

    Related Posts

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    July 9, 2026

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    July 9, 2026

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

    ரூ.2,000 நோட்டு இன்னும் வெச்சிருக்கீங்களா..?? RBI-யின் புதிய முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.