Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி
    Featured

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் கதிர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,

    மதுரை காந்தி அருங்காட்சியகம், பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுப் பாரம்பரிய பாதுகாப்பிற்கான முக்கிய மையமாக விளங்கி வருகிறது. 

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் காரணமாக காந்தி நினைவு அருங்காட்சியகமும் அதன் நூலகமும் மூடப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அதிகாரிகள் பலமுறை உறுதியளித்த போதிலும், இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாமல் இருப்பதுடன், திறப்பு தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இவை திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், போட்டித் தேர்வர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய பாரம்பரிய மையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பது அதன் நோக்கத்தையே பாதிக்கிறது.

    எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது

    அப்போது, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திறக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு குறித்து கலை மற்று பண்பாட்டு துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    Gandhi Museum Madras High Court Madurai Madurai Gandhi Memorial Museum
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!
    Next Article சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.