Close Menu
    What's Hot

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
    Featured

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 spk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

     காலதாமதமின்றி தமிழகத்து வழங்கவேண்டிய காவிரிநீரை கர்நாடகா வழங்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதில்,  காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் தெளிவாக உள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை காலதாமதமின்றி முழுமையாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள், காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா உள்ளிட்ட சாகுபடிகள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், தமிழகத்திற்குரிய நீர் உரிய நேரத்தில் கிடைக்காதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர்,

    கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் முழுமையாக மதித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை எந்தவித தாமதமும் இன்றி திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய அரசும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீடு செய்து, தமிழகத்திற்கு உரிய நீர் பங்கினை முழுமையாகப் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாகும் என கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    Cauvery Water karnataka government selvaperunthagai Timely Cauvery Water Release
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி
    Next Article காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    July 9, 2026

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    July 9, 2026

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.