Author: Editor web2

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், “எவ்வளவு வலுவான அணை கட்டினாலும், காவிரி ஆறு அணையை உடைத்துக்கொண்டு தமிழ் மண்ணுக்குத்தான் வரும்; இயற்கையின் விதியை மாற்ற மத்திய அரசாலும், கர்நாடக அரசாலும் முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்களின் அளவை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்க முடியாதது என்றும், நெய்வேலி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அதுவரை வசூல் நடவடிக்கைகளை நிறுத்த முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கரூரில் உயிரிழந்தோரின்…

Read More

தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதைத் தடுக்க , மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், சமூக நீதியை நிலைநாட்டவும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தனது தலைமையிலான அதிமுக அரசுகள் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 69 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் அதன் முக்கிய எடுத்துக்காட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார். 2011 முதல் 2021 வரை 19 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன், அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் சுமார் 5,500-க்கும் மேல் உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் 2021-க்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு சில தனியார் மருத்துவக்…

Read More

இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது தமிழ்நாட்டின் தொழில் வலிமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் அதிகபட்ச ஏற்றுமதி வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்திருப்பது, பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட தொழில் அடித்தளத்தின் வெற்றி எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஏற்றுமதி சாதனை என்பது ஒரே நாளில் உருவானதல்ல என்றும், தொழில்முனைவோர், தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME), ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்ட தொழில் கொள்கைகளும், வலுவான நிறுவன அடித்தளங்களுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் தமிழ்நாடு அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்ல; அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்…

Read More

மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த திட்டத்திற்கு ஜப்பான் ஜைக்கா (JICA) நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது. 2024 மே மாதம் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 2027 பிப்ரவரிக்குள் முழுமையாக நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளர் (OPD) கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் 900 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இதில் 150 படுக்கைகள் தொற்றுநோய் சிகிச்சைக்காக ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் 24 கட்டிடங்கள், 750 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல், மாணவர் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் உலகத் தரத்திலான மருத்துவ வளாகமாக எய்ம்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்…

Read More

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜு, தனது மனைவியான பேராசிரியையுடன் குடும்பத்தினருடன் சில நாட்களுக்கு முன்பு திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, திற்பரப்பு தடுப்பணையில் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்த மூன்று இளைஞர்கள், பேராசிரியை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தண்ணீர் தெளித்து அச்சுறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேராசிரியை படகுத்துறை குத்தகைதாரர்களிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியை மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பவத்தில் தொடர்புடைய மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட OBC அணி துணைத் தலைவர் பிரபு (36), டார்வின் மற்றும் பிரைட் ராபின் ஆகியோர் மீது கடையால்மூடு போலீசார் வழக்குப்பதிவு…

Read More

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், இந்த ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றார். புதிய ஊதிய விவரப்படி, உதவி விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும் என்றும், மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயரும். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ESI மருத்துவக் காப்பீட்டு வசதியும் இனி டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட…

Read More

திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் விட்டு சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். “அதிமுக என்பது மாபெரும் ஆலமரம். அதிலிருந்து ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லலாம்; அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இங்கு திரண்டுள்ள நிர்வாகிகளை பார்க்கும்போதே கட்சியின் வலிமை தெரிகிறது” என்று அவர் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்; நமது முன்னோடி தலைவர்களும் தமிழ்நாட்டிற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.…

Read More

“தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத பள்ளிக் குழந்தையைக் குற்றப்படுத்தலாமா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா?…

Read More

தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரைப் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்ட மூவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையர் அழகு சாட்சிக் கூண்டில் நின்று, குற்றச் சதி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களை கண்டறிய காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாகவும், வெள்ளைத் தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் கூறி, போலீஸ் காவலுக்கு அனுப்பக் கூடாது என தெரிவித்தனர். மூவரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.…

Read More

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலின் உள் பிரகாரத்தில் பெண் நாட்டியக் கலைஞர் ஒருவர் நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக போற்றப்படும் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், புதுமணத் தம்பதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு வந்து வழிபடுவதோடு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தும் தற்போது அமெரிக்காவில் நாட்டியப் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு ஏகாம்பரநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், உள் பிரகாரத்தில், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இடம்பெற்ற ”அழகு மயில் ஆட……

Read More