Close Menu
    What's Hot

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு
    Featured

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    Editor web2By Editor web2July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Court hammer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரைப் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

    இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்ட மூவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையர் அழகு சாட்சிக் கூண்டில் நின்று, குற்றச் சதி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களை கண்டறிய காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டதாகவும், வெள்ளைத் தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் கூறி, போலீஸ் காவலுக்கு அனுப்பக் கூடாது என தெரிவித்தனர்.

    மூவரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அரசியல் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் விசாரணை தேவையில்லை என்றும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் அருண் அன்புமணி, வழக்கில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய ஐபோன்களில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், சிங்கப்பூரில் இருந்தே உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒருவர் வீட்டில் ரூ.1 லட்சமும், மற்றொருவர் வீட்டில் ரூ.13 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குதிரைப் பேரமாக பேசப்பட்டதாகக் கூறப்படும் ரூ.35 கோடி பணத்தின் மூலத்தை கண்டறிய காவல் விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீஸ் காவல் கோரிய மனு மீதான உத்தரவை நாளை வழங்குவதாக அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

    CashForDefection PoliceCustody TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்
    Next Article ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்
    Editor web2
    • Website

    Related Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    July 14, 2026

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.