Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்
    தமிழ்நாடு

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    Editor web2By Editor web2July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் விட்டு சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

    “அதிமுக என்பது மாபெரும் ஆலமரம். அதிலிருந்து ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லலாம்; அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இங்கு திரண்டுள்ள நிர்வாகிகளை பார்க்கும்போதே கட்சியின் வலிமை தெரிகிறது” என்று அவர் கூறினார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

    வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்; நமது முன்னோடி தலைவர்களும் தமிழ்நாட்டிற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

    மாற்றுக் கட்சிக்கு சென்றவர்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், “அங்கு அவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை விரைவில் பார்ப்பீர்கள். அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது” என்று கூறினார்.

    கூட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அனைவரும் இணைந்து கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    AIADMK EdappadiPalaniswami TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்
    Next Article டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?
    Editor web2
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.